Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மனிதாபிமானமற்ற செயல், போர்க்கால நடவடிக்கை வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

EPS Urges Swift Action : இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும், மாலியில் 5 தமிழர்கள் கடத்தப்பட்டது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மனிதாபிமானமற்ற செயல்,  போர்க்கால நடவடிக்கை வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
எடப்பாடி பழனிசாமி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 12 Nov 2025 18:45 PM IST

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (Edappadi K Palaniswami), தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டதும், மாலியில் தமிழர்கள் கடத்தப்பட்டதையும் கண்டித்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீதான இலங்கை (Sri Lanka) கடற்படையின் தாக்குதல்கள் மற்றும் கைது சம்பவங்கள் தொடர்தையாகி வருகின்றன. இந்த நிலையில் இதனைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தமிழக மீனவர்களின் கைதுக்கு கண்டனம்

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  “தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. கடந்த 8.11.2025 அன்று மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி வானகிரி ஊராட்சியைச் சேர்ந்த ராமையன் என்பவருக்குச் சொந்தமான படகில் 12 மீனவர்கள், தரங்கம்பாடி பேரூராட்சி மற்றும் கடலூர் மாவட்டம் வசானா குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் என்று மொத்தம் 14 பேர் மீன்பிடிக்கச் சென்றனர்.

இதையும் படிக்க : அடுத்தடுத்து அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தமிழகத்தில் பரபரப்பு!!

இந்த நிலையில், படகில் பழுது ஏற்பட்ட காரணத்தினால், காற்று வேகத்தில் திசை மாறி இலங்கை கடற்பரப்பிற்குள் சென்றதால் 9.11.2025 அன்று இலங்கை கடற்படை மீனவர்களால் கைது செய்யப்பட்டனர்.  இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற இந்த செயலை முடிவுக்குக் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளையும் வழங்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மாலியில் தமிழர்கள் கடத்தப்பட்டது குறித்து பதிவு

 

இதையும் படிக்க : நம் முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை.. எஸ்ஐஆர் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள கோப்ரி நகரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா, சுரேஷ், பொன்னுத்துரை, புதியவன், பேச்சிமுத்து ஆகிய ஐந்து பேரை, உள்நாட்டுப் பிரச்னை காரணமாக ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பயங்கரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தோரை மீட்க அந்நாட்டு தூதரகம் வாயிலாக முன்னெடுப்புகளை துரிதப்படுத்துமாறு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.