பீகார் தேர்தல் 2025: பீகாரில் வாக்குப்பதிவு முடிந்தது.. எக்ஸிட் போல் முடிவுகள் யாருக்கு சாதகம்?
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பீகார் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது. இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டத்தில், நவம்பர் 11, 2025 அன்று மாலை 5 மணி வரை 67.14 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இந்த நவம்பர் 14, 2025 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். எக்ஸிட் போல் முடிவுகள் குறித்து மிகுந்த உற்சாகம் நிலவுகிறது.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பீகார் தேர்தல் வாக்குப்பதிவு (Bihar Election) முடிந்தது. இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டத்தில், நவம்பர் 11, 2025 அன்று மாலை 5 மணி வரை 67.14 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இந்த நவம்பர் 14, 2025 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். எக்ஸிட் போல் முடிவுகள் குறித்து மிகுந்த உற்சாகம் நிலவுகிறது. கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு 15.6 சதவீதம் அதிகரித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் (NDA) ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணிக்கும் நீயா நானா என்று சொல்லும் விதத்தில்இடையே போட்டி நிலவுகிறது. இரு கூட்டணிகளும் வெற்றியில் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.
பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தல் முடிவுகள், மாலை 5 மணி வரை 67.14 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்த நவம்பர் 14, 2025 அன்று அறிவிக்கப்படும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு 15.6 சதவீதம் அதிகரித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட மகா பந்தன் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கூட்டணிகளும் வெற்றியில் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. 242 இடங்களில் இரு கூட்டணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பல நிறுவனங்கள் வெளியிட்ட கணிப்புகளின் படி, பாஜக கூட்டணி (NDA) பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி (RJD+) இரண்டாம் இடத்தில் உள்ளது. மேட்ரிஸ் (Matrize) நிறுவனத்தின் கணிப்பில், பாஜக கூட்டணி 147 முதல் 167 இடங்கள் வரை வெற்றி பெறும் எனவும், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 70 முதல் 90 இடங்கள் வரை பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் எக்ஸிட் போல் முடிவுகள்
| Source | NDA | RJD+ | JSP | OTH |
|---|---|---|---|---|
| Matrize | 147-167 | 70-90 | 0-2 | 2-8 |
| People’s Insight | 133-148 | 87-102 | 0-2 | 3-6 |
| Peoples Pulse | 133-159 | 75-101 | 0-5 | 2-8 |
| JVC’s Poll | 135-150 | 88-103 | 0-1 | 3-6 |
| Kamakhya Analytics | 167-187 | 54-74 | 0-2 | 2-7 |
| Chanakya | 130-138 | 100-108 | 0-0 | 3-5 |
| Polstrat | 133-148 | 87-102 | 0-0 | 3-5 |
யாருக்கு சாதகம்?
- People’s Insight நிறுவனத்தின் கணிப்பில், பாஜக கூட்டணி 133 முதல் 148 இடங்கள் வரை, ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி 87 முதல் 102 இடங்கள் வரை வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.
- Peoples Pulse கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 133–159, ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணிக்கு 75–101 இடங்கள் எனவும் கணித்துள்ளது.
- JVC’s Poll கணிப்பில் பாஜக கூட்டணிக்குக்கு 135–150, ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணிக்கு 88–103 இடங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அதேபோல் Kamakhya Analytics நிறுவனம் பாஜக கூட்டணிக்கு மிக அதிகமான 167 முதல் 187 இடங்கள் வரை வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. இதே சமயம் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு 54 முதல் 74 இடங்கள் என கணித்துள்ளது.
மொத்த கணிப்புகளின் அடிப்படையில், பாஜக கூட்டணிக்கு 135 முதல் 180 இடங்கள் வரை பெறும் வாய்ப்புள்ளது; இது பெரும்பான்மையை எட்டும் வகையில் உள்ளது. இதனால், பீகாரில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
அதே சமயம், ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணிக்கு சில கணிப்புகளில் 100 இடங்களுக்கு மேல் பெறும் வாய்ப்பும் காணப்படுவதால், வாக்கு எண்ணிக்கை நாளில் சுவாரஸ்யமான போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.