10வது முறையாக ஆட்சி அமைக்கும் நிதீஷ் குமார்.. இன்று பதவியேற்பு விழா.. பிரதமர் உட்பட பிற மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு..
CM Nitish Kumar Oath Taking Ceremony: 2025, நவம்பர் 20 ஆம் தேதியான இன்று, நிதீஷ் குமார் 10வது முறையாக பீகார் மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்கிறார். பதவியேற்பு விழா காலை 11:30 மணிக்கு பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெறும்.
பீகார், நவம்பர் 20, 2025: பீகார் மாநிலத்தில் அன்மையில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பாஜகவின் தேசிய ஜன்நாயக கூட்டணி 243க்கு 202 இடங்களில் வெற்றி பெற்று அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த சூழலில் பீகாரில் யார் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்ற கேள்வி நிலவி வந்தது. பீகாரின் அடுத்த முதலமைச்சராக நிதீஷ் குமார் பதவியேற்க உள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் அவரது பெயர் அங்கீகரிக்கப்பட்டது. சட்டமன்றக் கட்சித் தலைவராக அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சாம்ராட் சவுத்ரி நிதீஷின் பெயரை முன்மொழிந்த நிலையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் நிதீஷின் பெயரை ஒருமனதாக ஆதரித்தனர். 2025, நவம்பர் 20 ஆம் தேதியான இன்று, நிதீஷ் குமார் 10வது முறையாக பீகார் மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
மேலும் படிக்க: அமலுக்கு வந்த புதிய வாடகை விதிமுறைகள்.. யார் இதை பின்பற்ற வேண்டும்? விதிமுறையில் இருக்கும் முக்கிய அம்சங்கள் என்ன? முழு விவரம்..
பீகார் முதலமைச்சராக பதவியேற்கும் நிதீஷ் குமார்:
பதவியேற்பு விழா காலை 11:30 மணிக்கு பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெறும். இரு துணை முதலமைச்சர்களும் இதில் கலந்து கொள்வார்கள். நிதீஷ் குமார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. சாம்ராட் சவுத்ரி தலைவராகவும், விஜய் சின்ஹா துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூட்டத்தில் மத்திய பார்வையாளர் கேசவ் பிரசாத் மௌரியா இருவரையும் பாராட்டினார். இரண்டு கூட்டங்களுக்குப் பிறகு, NDA சட்டமன்றக் கட்சி கூடியது. நிதீஷ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதாவது அவர் பீகாரின் அடுத்த முதலமைச்சராக இருப்பார் என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் படிக்க: மருத்துவரின் பரிந்துரை சீட்டு கட்டாயம்.. இருமல் மருந்து விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு?
சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நிதிஷ் குமார் ராஜ்பவனுக்குச் சென்றார். அவர் தனது ராஜினாமாவை ஆளுநரிடம் சமர்ப்பித்து, அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமையை கோரினார். அவர் ஆளுநரிடம் ஆதரவு கடிதத்தையும் சமர்ப்பித்தார்.
பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ளும் பிரதமர் உட்பட முக்கிய முதலமைச்சர்கள்:
பாட்னாவின் காந்தி மைதானத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ்,
ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஞ்சி, ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, அசாம் முதல்வர் ஹேமந்த் விஸ்வ சர்மா, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.