AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இயற்கை எரிவாயு பெறும் வீடுகளுக்கு சிலிண்டர் கிடையாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு!

Png Access For Households : இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், குழாய் மூலம் இயற்கை எரிவாயு பெற்று வரும் வீடுகளுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படாது என்று மத்திய அரசு திடீர் உத்தரவை பிறப்பித்து உள்ளது .

இயற்கை எரிவாயு பெறும் வீடுகளுக்கு சிலிண்டர் கிடையாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு!
பிஎன்ஜி இணைப்பு பெறும் வீடுகளுக்கு சிலிண்டர் கிடையாது
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 14 Mar 2026 21:57 PM IST

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பொது விநியோக ஆணைய திருத்தத்தின் கீழ், குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்புகளை பெற்று வரும் வீடுகளுக்கு சிலிண்டர்களை பெறவோ அல்லது வைத்திருக்கவோ மீண்டும் எரிவாயுவை நிரப்பவோ முடியாது என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை அறிவாய் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசின் எண்ணெய் நிறுவனங்கள் தற்போது பி என் ஜி இணைப்புகள் உள்ள யாருக்கும் சிலிண்டர் இணைப்புகள் அல்லது எரிவாயு நிரப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவின் போர் இந்தியாவில் சிலிண்டர் இறக்குமதியே வெகுவாக பாதித்துள்ளதுடன் எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களை சிலிண்டர் முன்பதிவுகள் கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

வீடுகளுக்கு தடையின்றி சிலிண்டர் விநியோகம்

இந்த நிலையில் எரிவாயு உருளை தேவைப்படும் பொதுமக்கள் பொறுமையுடன் சிலிண்டர் தேவைப்படும் நேரத்தில் மட்டும் முன்பதிவு செய்யுமாறு அரசு வலியுறுத்தி இருந்தது. மேலும் வீடுகளுக்கு தடையின்றி சமையல் எரிவாயு உருளை வினியோகம் செய்யப்படும் என்று பெட்ரோலிய அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். மேற்கு ஆசிய போர் இடையூறு காரணமாக சிலிண்டர் பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக சுமார் 6 மில்லியன் வீடுகளுக்கு குழாயில் இயற்கை எரிவாயு வழங்கவும் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும் படிக்க: போர் எதிரொலி.. இன்று முதல் விமானக் கட்டணங்கள் அதிரடி உயர்வு..

நாடு முழுவதும் போதிய பெட்ரோல்- டீசல் இருப்பு உள்ளது

தற்போது நாடு முழுவதும் போதுமான பெட்ரோல் மற்றும் டீசல், சமையல் எரிபொருள் ஆகியவை இருப்பதாகவும், ஏற்கனவே 1.5 கோடி வீடுகள் பி என் ஜி விநியோகத்தை பெற்று வருவதாகவும், மேலும் 60 லட்சம் குழாய் இணைப்புகள் வழங்க தயாராக இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்திருந்தார். நாட்டில் போதுமான பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பதாகவும் தற்போது இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது

மேலும் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களை பொருத்தவரை, எங்களிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் இறப்பு உள்ளது. எங்கள் சுத்திகரிப்பு நிலையங்கள் முழு திறனுடன் இயங்கி வருகின்றன. சில்லறை விற்பனை நிலையங்களில் எந்த கட்டுப்பாடும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. எனவே, போதுமான அளவு டீசல் மற்றும் பெட்ரோல் கிடைத்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தி நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்கிறது என்று தெரிவித்தார்.

பெட்ரோல்-டீசல் இறக்குமதி செய்ய அவசியமில்லை

எங்கள் தேவைகளுக்கு ஏற்ப நாட்டில் போதுமான பெட்ரோல் மற்றும் டீசலை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். எனவே அவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று சர்மா கூறினார். இயற்கை எரிவாயுவை பொருத்தவரை எல்பிஜி விநியோகத்தில் இடையூறுகளை எதிர்கொள்ளும் வணிக நுகர்வோர் குழாய் இணைப்புகளுக்கு மாறுவதற்கு அரசாங்கம் ஊக்குவித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் நீரிணையை கடந்த இந்திய கப்பல்கள்.. பிரதமரின் தலையீட்டால் பலன்..

Follow Us