ஸ்கூட்டரில் சென்ற குடும்பத்தை கார் மோதி கொலை செய்ய முயன்ற இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!
Bengaluru Couple Car Attack | பெங்களூரில் ஒரு தம்பதியினர் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டு இருந்தபோது விபத்தில் சிக்கியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அது விபத்து அல்ல கொலை முயற்சி என்பது தெரிய வந்துள்ளது.
பெங்களூரு, நவம்பர் 14 : கர்நாடகா (Karnataka) மாநிலம் பெங்களூரில் (Bengaluru) உள்ள சதாசிவநகர் பகுதியில் வசித்து வருபவர் வினீத். 33 வயதாகும் இவருக்கு அங்கீதா என்ற 31 வயது மனைவி உள்ள நிலையில், ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், அவர் அக்டோபர் 26, 2025 அன்று தனது மனைவி, மகனுடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அவர்கள் அங்கிருந்து மீண்டும் ஸ்கூட்டரில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது அங்கிதா வண்டியை ஓட்ட வினீத் மற்றும் அவரது மகன் பின்னால் அமர்ந்து சென்றுள்ளனர்.
சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது ஸ்கூட்டரை மோதிய கார்
அவர்கள் மூவரும் சாலையில் ஸ்கூட்டரில் சென்றுக்கொண்டு இருந்தபோது அவர்களுக்கு பின்னால் வந்த கார் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது. இதில் வினீத் மற்றும் அங்கிதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் மகன் லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். இந்த நிலையில், வினீத் மற்றும் அங்கிதா சிகிச்சை பெற்று வீடு திருபியுள்ளனர். அப்போது வினீத்துக்கு மீண்டும் உடல்நல குறைப்பாடு ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க : டெல்லியில் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட உமர் நபி.. ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பயங்கரவாதி வீடு இடிப்பு




விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போது, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதில் பதிவாகியிருந்த காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அங்கிதா, வினீத் தம்பதியின் ஸ்கூட்டி மீது அந்த கார் வேண்டும் என்றே மோதியது என்றும் அவர்களை கொலை செய்யும் நோக்கத்தில் அந்த கார் மோதியது என்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதையும் படிங்க : இந்திய விமானங்களுக்கு அவசர எச்சரிக்கை… ஜிபிஎஸ் சிக்னல் பாதிக்கும் வாய்ப்பு – என்ன நடக்கிறது?
கொலை முயற்சி செய்த நபரிடம் விசாரணை
தம்பதியை கொலை செய்யும் நோக்கில் அவர்கள் மீது காரை மோதி, நிறுத்தாமல் சென்ற சுக்ருத் கவுடா என்ற 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கணினி பொறியாளரான அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.