Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்திய விமானங்களுக்கு அவசர எச்சரிக்கை… ஜிபிஎஸ் சிக்னல் பாதிக்கும் வாய்ப்பு – என்ன நடக்கிறது?

Aviation Warning : மும்பை வான்வெளியில் ஜிபிஎஸ் சிக்னல் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் குறித்து இந்தியா அவசர எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி, நவம்பர் 13 முதல் 17, 2025 வரை இந்த எச்சரிக்கை அமலில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானங்களுக்கு அவசர எச்சரிக்கை… ஜிபிஎஸ் சிக்னல் பாதிக்கும் வாய்ப்பு – என்ன நடக்கிறது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 13 Nov 2025 22:31 PM IST

மும்பை (Mumbai) அருகிலுள்ள இந்திய வான்வெளி பகுதியில்  ஜபிஎஸ் சிக்னல் பாதிப்பு அல்லது வேறு சிக்னல்கள் குறுக்கீடு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக இந்தியா விமானங்களுக்கு (Flight) அவசர எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நவம்பர் 13 முதல் 17, 2025 வரை அமலில் இருக்கும். இந்த தகவலை செயற்கை நுண்ணறிவு ஆய்வு நிறுவனமான தி இன்டெல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் டேமியன் சைமன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். இந்த எச்சரிக்கை விமானங்கள், விமான நிறுவனங்கள் மற்றும் பைலட்டுகள் சாட்டிலைட் வழிசெலுத்தும் அமைப்புகளில் ஏற்படக்கூடிய சிக்கல்கள், சிக்னல் இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது.

இந்திய விமானங்களுக்கு அவசர எச்சரிக்கை

இது தொடர்பாக டேமியன் சைமன் தனது பதிவில் கூறியிருப்பதாவது, மும்பை அருகிலுள்ள வான்வெளிகளில் ஜிபிஎஸ் குறுக்கீடு அல்லது சிக்னல் இழப்பு குறித்து இந்தியா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இது சில நாட்களுக்கு முன்பு டெல்லி அருகே கண்டறியப்பட்ட அதே பிரச்சனையை போன்று தொடர்ந்து ஏற்பட வாயப்புள்ளது.

இதையும் படிக்க : டெல்லியில் 6 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம்.. குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையில் வெளியான திடுக் தகவல்..

இந்த எச்சரிக்கை வெளியிடுவதன் சில நாட்களுக்கு முன்பு, விமானப் போக்குவரத்து இயக்குனரகம் விமான நிறுவனங்கள், பைலட்டுகள், ஏர்ட்ராஃபிக் கட்டுப்பாட்டாளர்கள் எல்லோருக்கும் GPS spoofing சம்பவங்களை 10 நிமிடங்களுக்குள் அவசரமாக தெரிவிக்க உத்தரவிட்டது. டெல்லி வான்வழியில் சமீபத்தில் இதேபோன்ற ஜிபிஎஸ் குறுக்கீடு ஏற்பட்டதால் இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் மிகுந்த கவனம் செலுத்துகிறது.

ஜிபிஎஸ் ஸ்பூஃபிங் என்றால் என்ன?

ஜிபிஎஸ் ஸ்பூஃபிங் என்பது பொய்யான செயற்கைக்கோள் சிக்னல்களை அனுப்பி விமானத்தின் உண்மையான நிலை, வேகம் அல்லது நேரத்தை தவறாக காட்டச் செய்வதாகும். இது பாதை மாற்றங்கள் போன்ற பாதுகாப்பு அபாயங்களை உருவாக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது.  இது ஜாமிங் என்பதில் இருந்து வேறுபட்டது. பொதுவாக ஜாமிங் என்பது ஜிபிஎஸ் சிக்னலை சத்தத்தால் நிரப்பி சிக்னலை முடக்குகிறது. ஆனால் ஸ்பூஃபிங் என்பது போலி சிக்னலை அனுப்பி ஜிபிஎஸ் சிக்னலை தவறாக வழி நடத்துகிறது.

இதையும் படிக்க : சென்னை உட்பட 5 சர்வதேச விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. தொடரும் பதற்றம்!!

விமானப்போக்குவர்ததுறை வெளியிட்ட 3 பக்க சுற்றறிக்கையில், “பைலட், ஏர்ட்ராஃபிக் கட்டுப்பாளர்கள் அல்லது தொழில்நுட்ப குழுவில் யாரேனும் ஜிபிஎஸில் வழக்கத்துக்கு மாறான மாற்றங்களைக் கண்டறிந்தால், 10 நிமிடங்களுக்குள் நேரடியாக தகவல் அளிக்க வேண்டும்,” என உத்தரவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பயணிகள் பாதுகாப்பு, விமானங்களின் நாவிகேஷன் அமைப்புகளில் பாதிப்பு, இராணுவ மற்றும் வணிக விமானங்களின் செயல்திறன் ஆகியவற்றில் நேரடி தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என்பதால் மிக முக்கியத்துவம் பெறுகிறது. மும்பை மற்றும் டெல்லி வான்வழிகளில் தொடர்ச்சியான GPS குறுக்கீடுகள் கண்டறியப்பட்டுள்ளதால், இந்தியா தற்போது உயர்ந்த பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்தி வருகிறது.