டெல்லியைத் தொடர்ந்து சீரியல் பிளாஸ்ட்… இந்த 4 நகரங்களுக்கு டார்கெட் – வெளியான பகீர் தகவல்கள்
Delhi Serial Blast Plot Exposed: டெல்லி வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு சதி கும்பல், சீரியல் பிளாஸ்ட் முறையில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது காவல்துறையினரின் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உமர் நபியும் முஜம்மிலும் தங்கியிருந்த அறைகளில் இருந்து குறியீட்டு வார்த்தைகள் நிறைந்த இரண்டு டைரிகள் கைப்பற்றப்பட்டன.
புதுடெல்லி, நவம்பர் 13 : டெல்லி (Delhi) செங்கோட்டை அருகே ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பின், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரின் ஓட்டுநர் டாக்டர் உமர் நபி என்பதும்,4 நகரங்களில் சீரியல் பிளாஸ்ட் நடத்த திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏஎன்ஐ வெளியிட்ட தகவலின்படி, இந்த பயங்கரவாத குழு 32 பழைய வாகனங்களில் வெடிபொருட்களை நிரப்பி, ஒரே நேரத்தில் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சதிக்கு பின்னால் டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட டாக்டர் முஜம்மில், டாக்டர் அதீல், டாக்டர் உமர் நபி, ஷஹீன் உள்ளிட்டோர் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையில் வெளியான 8 முக்கிய தகவல்கள்
டெல்லி காவல்துறை நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், கார் வெடித்து சிதைந்த நிலையில் கிடைத்த உடல் பாகங்கள் உமர் நபியின் தாயின் டிஎன்ஏவுடன் பொருந்தியதால், அது உமர் நபியின் அடையாளம் உறுதிசெய்யப்பட்டது. குண்டுவெடிப்பின் போது காரின் ஸ்டீயரிங் மற்றும் ஆக்சலேட்டர் இடையே உமரின் கால் சிக்கியிருந்தது. இந்த நிலையில் அவர் காரை ஓட்டிக் கொண்டிருந்ததை உறுதியானது.
இதையும் படிக்க : சென்னை உட்பட 5 சர்வதேச விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. தொடரும் பதற்றம்!!




விசாரணையில், இந்த சதியில் ஈடுபட்டவர்கள் ஏற்கனவே ஒரு i20, Ford EcoSport கார்களை மாற்றி வெடிப்பொருட்களை நிரப்பியது விசாரணையில் தெரியவந்தது. மேலும், மொத்தம் 32 பழைய வாகனங்கள் கூட வெடிப்பொருட்களை பொருத்துவதற்கு ஏதுவாக தயார் செய்யப்போவதாக திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிவப்பு Ford EcoSport கார் ஃபாரிதாபாத் பகுதியில் கைப்பற்றப்பட்டது. இந்த வாகனம் உமர் நபியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், வெடிகுண்டை பொறுத்தும் சோதனையில் இதனை பயன்படுத்தியிருந்ததாக நம்பப்படுகிறது.
உமர் நபியும் முஜம்மிலும் தங்கியிருந்த அறைகளில் இருந்து குறியீட்டு வார்த்தைகள் நிறைந்த இரண்டு டைரிகள் கைப்பற்றப்பட்டன. இதில் நவம்பர் 8. 2025 முதல் நவம்பர் 12, 2025 வரை நடந்த திட்டமிடல், 25 பெயர்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் நன்கு திட்டமிடப்பட்ட சதி என்பது தெளிவாக தெரிந்தது.
4 நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டம்
மேலும் விசாரணையில் 8 பேர் ஒரு குழுவுக்கு இருவர் என நான்கு குழுக்களாக பிரிந்து, நான்கு நகரங்களில் ஒரே நேரத்தில் நாக்குதல் நடத்த திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது. சதி திட்டம் தீட்டியவர்கள் உமரிடம் ரூ.20 லட்சம் வழங்கியதாகவும் அவற்றை நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை வாங்க பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. மேலும் உமர் நபி மற்றும் முஜம்மில் ஆகியோர் இடையே பணம் தொடர்பான பிரச்னையும் இருந்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க : டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்: சிக்கும் மருத்துவர்கள்.. வெளியான பகீர் தகவல்!!
சிக்னல் ஆப்பில் 2 முதல் 4 பேர் கொண்ட ரகசிய குழுக்களை உருவாக்கி அதில் மட்டுமே தங்கள் தகவல்களை பரிமாறி வந்திருக்கின்றனர். கடந்த 2021 முதல் 2022 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மரணமடைந்த தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்களை சந்தித்த முஜம்மில் ஐஎஸ்ஐஎஸ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2023 முதல் 2024 ஆம் ஆண்டு காலகட்டங்களில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இந்த கும்பலை சேர்ந்தது என்று உண்மையும் தற்போது வெளியாகியுள்ளது.