Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்.. காரை இயக்கியது டாகர் உமர் தான் – டி.என்.ஏ சோதனையில் உறுதி..

Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில், i20 காரை ஓட்டிச் சென்றவர் வேறு யாருமல்ல, டாக்டர் உமர் என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது DNA மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணை நிறுவனங்கள் டாக்டர் உமரின் தாயாரின் டிஎன்ஏ மாதிரிகளை பரிசோதித்த போது இது உறுதி செய்யப்பட்டது.

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்.. காரை இயக்கியது டாகர் உமர் தான் – டி.என்.ஏ சோதனையில் உறுதி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 13 Nov 2025 08:25 AM IST

டெல்லி, நவம்பர் 13, 2025: தேசிய தலைநகர் டெல்லியில் நவம்பர் 10, 2025 திங்கள் அன்று மாலை நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பல்வேறு விவரங்கள் வெளியாகி வருகின்றன. அரசாங்கமும் இதை பயங்கரவாத தாக்குதல் என்று அறிவித்துள்ளது. இதற்கிடையில், i20 காரை ஓட்டிச் சென்றவர் வேறு யாருமல்ல, டாக்டர் உமர் என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது DNA மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணை நிறுவனங்கள் டாக்டர் உமரின் தாயாரின் டிஎன்ஏ மாதிரிகளை, ஐ20 காரில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் மற்றும் பற்களின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒப்பிட்டன. போலீஸ் வட்டாரங்களின்படி.

காரை இயக்கியது டாக்டர் உமர் தான் – உறுதி செய்த அதிகாரிகள்:

டாக்டர் உமரின் தாயாரின் டிஎன்ஏ, ஐ20 காரில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் மற்றும் பற்களின் டிஎன்ஏ மாதிரிகளுடன் பொருந்தியது. வெடிப்புக்குப் பிறகு , டாக்டர் உமரின் கால் ஸ்டீயரிங் வீலுக்கும் ஆக்ஸிலரேட்டருக்கும் இடையில் சிக்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: சென்னை உட்பட 5 சர்வதேச விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. தொடரும் பதற்றம்!!

டெல்லி குண்டுவெடிப்புக்கு முன்பு, நாடு முழுவதும் பயங்கரவாதிகள் பலரை போலீசார் கைது செய்து, ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இந்த போலீஸ் நடவடிக்கை உமரை பயமுறுத்தியதாக நம்பப்படுகிறது, அதனால்தான் அவர் இவ்வளவு அவசரமாக தாக்குதலை நடத்தினார் எனவும் கூறப்படுகிறது.

வெடிபொருட்களை சேகரித்து வரும் மருத்துவர்கள்:

டெல்லி குண்டுவெடிப்புக்குப் பிறகு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில், ஃபரிதாபாத்தைச் சேர்ந்த டாக்டர் ஷாஹீன் ஷாஹித்தை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையின் போது, ​​கடந்த இரண்டு ஆண்டுகளாக வெடிபொருட்களை சேமித்து வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த மருத்துவர்கள் குழு முழுவதும் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் இருந்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. டெல்லி குண்டுவெடிப்புக்குப் பிறகு, புலனாய்வு அமைப்புகள் 18 -க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து, முழு வழக்கு தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வரும் பலரைக் கைது செய்துள்ளன.

மேலும் படிக்க: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்… தேடப்பட்டு வந்த கார் கண்டுபிடிப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்

பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர்:


இது ஒரு பக்கம் இருக்க, பூட்டான் பயணத்திற்குப் பிறகு நவம்பர் 12, 2025 புதகிழமை பிற்பகல் டெல்லியின் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்றார். அங்கு காயமடைந்தவர்களைச் சந்தித்து, தாக்குதலுக்குக் காரணமானவர்கள் எந்த சூழ்நிலையிலும் தப்பவிடப்பட மாட்டார்கள் என்பதைத் தெளிவுபடுத்தினார்.