Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோரை சந்தித்த பிரதமர் மோடி.. இந்திய மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற அழைப்பு..

PM Modi South Africa Visit: இந்த சந்திப்பின் போது பேசிய பிரதமர் மோடி, “யோகா, ஆயுர்வேதம் போன்ற நடைமுறைகள் உட்பட தென்னாப்பிரிக்க மக்களிடையே இந்திய கலாச்சாரத்தின் பிரபலத்தை அதிகரிக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே உறவை மேம்படுத்தும் ஒரு உயிர்ப்பு பாலமாக இந்திய வம்சாவளி மக்கள் செயல்படுகிறார்கள்,” என்று குறிப்பிட்டார்.

ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோரை சந்தித்த பிரதமர் மோடி.. இந்திய மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற அழைப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 22 Nov 2025 10:23 AM IST

நவம்பர் 22, 2025: பிரதமர் நரேந்திர மோடி நேற்று (நவம்பர் 21, 2025) தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் இந்திய சமூக உறுப்பினர்களுடன் உரையாடி, இந்தியாவுடனான தங்கள் ஈடுபாட்டை ஆழப்படுத்துமாறு அழைப்பு விடுத்தார். ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜோகன்னஸ்பர்க் சென்றிருந்த பிரதமர் மோடி, தனது சமூக வலைதள பதிவில், இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோருடன் “பயனுள்ள உரையாடல்” நடைபெற்றதாகவும், நிதி தொழில்நுட்பம், சமூக ஊடக தளங்கள், விவசாயம், கல்வி, சுகாதாரம், மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளில் அவர்கள் செய்து வரும் பணிகள் குறித்து அவர்கள் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற பிரதமர் அழைப்பு:


இதுகுறித்து அவரது சமூக வலைதள பதிவில், “இந்தியாவுடனான அவர்களின் ஈடுபாட்டை ஆழப்படுத்தவும், நமது மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்றவும் அவர்களை அழைத்தேன்,” என்று கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகளுடன் தீவிரமாகப் பணியாற்றி வரும் இந்திய சமூக உறுப்பினர்களையும் பிரதமர் சந்தித்தார்.

மேலும் படிக்க: 7-ம் தேதிக்குள் சம்பளம்… ஒப்பந்த ஊழியர்களுக்கும் பிஎஃப் – அமலுக்கு வந்த 4 புதிய தொழிலாளர் சட்டங்கள்

மேலும், “பல்வேறு விஷயங்களில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்த அவர்கள், பல துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பாராட்டினர். மக்கள் தொடர்புகளை மேம்படுத்தும் உறுதுணையைத் தொடர்ந்து கொண்டிருப்பதற்காக அவர்களை வலியுறுத்தினேன்,”
என தெரிவித்துள்ளார்.

இந்திய கலாச்சாரத்தைப் பரப்புவதில் புலம் பெயர்ந்தோரின் பங்கு:

இந்த சந்திப்பின் போது பேசிய பிரதமர் மோடி, “யோகா, ஆயுர்வேதம் போன்ற நடைமுறைகள் உட்பட தென்னாப்பிரிக்க மக்களிடையே இந்திய கலாச்சாரத்தின் பிரபலத்தை அதிகரிக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே உறவை மேம்படுத்தும் ஒரு உயிர்ப்பு பாலமாக இந்திய வம்சாவளி மக்கள் செயல்படுகிறார்கள்,” என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: கர்நாடக காங்கிரஸில் அதிகாரப் போட்டி தீவிரம்…. டெல்லிக்கு விரைந்த எம்எல்ஏக்கள் – என்ன நடக்கிறது.

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான வரலாற்று நட்புறவை வளர்ப்பதில், தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் மூன்று புள்ளி எட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட இந்திய புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார். மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலாவின் பாரம்பரியத்துடன் இளைஞர்கள் இணைவதற்கு உதவும் அவர்களின் முயற்சிகளையும் பிரதமர் பாராட்டினார்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பாரத் கோ ஜானியே வினாடி வினா போட்டியின் வெற்றியாளர்களையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது அவர், “இந்த வினாடி வினா போட்டி இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பல்வேறு அம்சங்களைப் பற்றி மேலும் அறிய நமது புலம்பெயர்ந்தோரைக் ஊக்குவிக்கிறது,” என்று குறிப்பிட்டார்.