கர்நாடக காங்கிரஸில் அதிகாரப் போட்டி தீவிரம்…. டெல்லிக்கு விரைந்த எம்எல்ஏக்கள் – என்ன நடக்கிறது.
Surjewala Issues Statement: கர்நாடக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆதரவு எம்எல்ஏக்கள் 10க்கும் மேற்பட்டோர் கட்சியின் தலைமைக்கு நேரடியாக தங்கள் அதிருப்தியை தெரிவிக்க சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
பெங்களூர், நவம்பர் 21 : கர்நாடக காங்கிரஸில் (Congress) அதிகாரப் போராட்டம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆதரவு எம்எல்ஏக்கள் 10க்கும் மேற்பட்டோர் ஒரு அமைச்சருடன், நவம்பர் 21, 2025 அன்று டெல்லிக்குப் புறப்பட்டுள்ளனர். கட்சியின் தலைமைக்கு நேரடியாக தங்கள் அதிருப்தியை தெரிவிக்க அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையா (Siddaramaiah) ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், ரொட்டேஷன் முறையில் சிவக்குமாருக்கு வாய்ப்பு வழங்க மறுப்பதாகவும் அதற்காக காங்கிரஸ் தலைமையில் முறையிடவே இந்த பயணம் என கூறப்படுகிறது.
கர்நாடக காங்கரஸில் வலுக்கு உட்கட்சி பூசல்
கடந்த 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சி அதிகார பகிர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அதனை நடைமுறைபடுத்த வேண்டும் என்பதற்காகவே டெல்லி செல்வதாகவும் எம்எல்ஏக்கள் தெரிவித்தனர். மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோரை சந்தித்து நிலைமையை விளக்க திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிக்க : பீகார் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ் குமார்.. முழு விவரம்!
இதற்கிடையில், காங்கிரஸ் பொது செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா சமூக வலைதளத்தில், “பல்வேறு தலைவர்களின் கருத்துகளையும் அதிருப்திகளையும் கட்சி தலைமை ஏற்கனவே கவனம் செலுத்தி வருகிறது. இனி யாரும் தலைமை குறித்து, அதிகார பகிர்வு குறித்து, அல்லது ஊடகங்களில் பரப்பப்படும் கதைகளை நம்பி எந்த பொது கருத்தையும் வெளியிடக்கூடாது. என்று பதிவிட்டுள்ளார்
காங்கிரஸ் பொதுச்செயலாளரின் பதிவு
Had a discussion with Karnataka CM and Deputy CM and they agreed that a decisively defeated and faction ridden Karnataka BJP, alongwith a section of the media, are designedly running a maligning campaign against Karnataka and its Congress Government.
The sole idea is to…
— Randeep Singh Surjewala (@rssurjewala) November 21, 2025
இதையும் படிக்க : பிரதமர் மோடி அணிந்த ரூ.60,000 மதிப்பிலான விலையுயர்ந்த வாட்ச் – இதில் என்ன ஸ்பெஷல்?
இது குறித்து விளக்கமளித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், எந்த குழுவையும் உருவாக்குவது என் ரத்தத்தில் இல்லை. 140 பேரும் என் எம்எல்ஏக்களே யாரையும் பிரிக்க முயற்சி செய்ததில்லை. செய்யவும் மாட்டேன். எல்லோருக்கும் அமைச்சர் ஆகவேண்டும் என்பது இயல்பான ஆசை. அதனால்தான் சிலர் டெல்லி சென்று தலைமையினரைச் சந்திக்கிறார்கள். அது அவர்களின் உரிமை. அதைக் கட்டுப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. முதல்வர் 5 ஆண்டுகள் முழுவதும் நீடிப்பார் என சொல்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நாங்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து பணியாற்றுவோம் என்றார்.