7-ம் தேதிக்குள் சம்பளம்… ஒப்பந்த ஊழியர்களுக்கும் பிஎஃப் – அமலுக்கு வந்த 4 புதிய தொழிலாளர் சட்டங்கள்
Labour Code : இந்திய அரசு பல ஆண்டுகளுக்குப் பிறகு ப4 தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் சம்பளம், தொழிலாளர் நலன்கள், வேலை நேரம் மற்றும் பணியாளர் பாதுகாப்பு போன்றவை புதிய விதியின்படி நடைமுறைக்கு வர உள்ளது.
இந்திய அரசு பல ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் சட்டங்களில் (Labour Code) மிகப் பெரிய மாற்றமாகக் கருதப்படும் புதிய 4 தொழிலாளர் சட்டங்களை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் சம்பளம், தொழிலாளர் நலன்கள், வேலை நேரம் மற்றும் பணியாளர் பாதுகாப்பு போன்றவை புதிய விதியின்படி நடைமுறைக்கு வர உள்ளது. இந்த மாற்றம் இந்தியாவின் மிகப் பெரிய வேலைவாய்ப்பு (Job) துறைகளில் ஒன்றான ஐடி துறைக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த கிட்டத்தட்ட தொழிலாளர்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் வகையில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஒப்பந்த ஊழியர்களுக்கும் நிரந்தர ஊழியர் நலன்கள் கட்டாயம்
புதிய சட்டங்களின்படி, ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்யும் ஐடி ஊழியர்களுக்கும், அவர்கள் வேலை செய்யும் காலத்தில் பிஎஃப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, கிராஜுட்டி, சமூக பாதுகாப்பு நலன்கள் ஆகியவற்றை நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவது போலவே வழங்க வேண்டும். இதுவரை ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த நலன்கள் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது இது சட்ட ரீதியாக கட்டாயமாகிறது.
இதையும் படிக்க : ஆளுநரின் அதிகாரம்… தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம் – குடியரசுத் தலைவரின் 14 கேள்விகளுக்கு பதில்!




7ஆம் தேதிக்குள் சம்பளம்
புதிய தொழிலாளர் சட்டங்களில் மிக முக்கியமான மாற்றம் சம்பளத்தைப் பற்றியதாக இருக்கிறது. இது அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இது தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இடையிலான நம்பிக்கையை உயர்த்தும் எனவும் நிதி சிக்கல்களைக் குறைக்கும் எனவும் கூறப்படுகிறது.
பெண்கள் இரவு வேலையில் பாதுகாப்பு வசதிகள் கட்டாயம்
பெண்கள் இரவு நேரத்தில் வேலை பார்க்க விரும்பினால், அவர்களுக்கு பாதுகாப்பு, அவர்கள் சென்று வர போக்குவரத்து ஏற்பாடுகள், தேவைப்பட்டால் மருத்துவ உதவிகள் எல்லாவற்றையும் ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
புகார்களுக்கு விரைவான தீர்வு
புதிய சட்டங்கள் படி, நிறுவனங்கள் இனி பணியாளர்களின் புகார்களுக்கு உடனடியாக தீர்வை வழங்க வேண்டும். அதே நேரம் பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஊதியம் தாமதமாவது குறைக்கப்பட வேண்டும். இவைகளை முடிந்த அளவு வேகமாக மேற்கொள்ள வேண்டும். இனி அனைத்து ஊழியர்களுக்கு நியமன கடிதம் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தெரு நாய் கடித்த மாட்டின் பாலை குடித்த கிராம மக்கள்.. 160 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி!
இந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் இந்தியாவின் பழைய 29 தொழிலாளர் சட்டங்களை ஒரே வடிவத்தில் மாற்றுகின்றன. அரசு கூறுவதாவது, இது இந்தியாவின் வேலை விதிகளை நவீனத்துவம் செய்யும் வகையிலும், எதிர்காலத்தில் புதிய வேலை வடிவத்துக்கு நாட்டைத் தயாராக்குவதற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.