கடும் வார்த்தை போருக்கு பிறகு மம்தானியை சந்திக்கும் டொனால்ட் டிரம்ப்!
Donald Trump to Meet Zohran Mamdani | அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் நியூயார்க்கின் புதிய மேயர் சோரன் மம்தானி இடையே கடுமையான வார்த்தை போர் நீடித்து வந்தது. இந்த நிலையில் தான், அவர்கள் இருவரும் சந்தித்து பேச உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன், நவம்பர் 20 : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump), நியூயார்க்கின் புதிய மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் சோரன் மம்தானியை நவம்பர் 21, 2025 அனறு சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த நியூயார்க் தேர்தலை தொடர்ந்து இருவரும் மாறி மாறி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துக்கொண்ட நிலையில், வெள்ளை மாளிகையில் இருவரும் சந்தித்து பேச உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். இவர்களின் சந்திப்பு அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
சோரன் மம்தானியை சந்திக்கும் டிரம்ப்
நியூயார்க்கின் மேயராக மம்தானி பதவி ஏற்றதை தொடர்ந்து அவர் தனது மேடை பேச்சில் டிரம்ப் குறித்த சில கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் டிரம்ப் பேசி இருந்தார். இதன் காரணமாக டிரம்ப் மற்றும் மம்தானி இடையே வார்த்தை போர் நீடித்து வந்தது. இந்த நிலையில், தான் மம்தானி தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துள்ளதாக டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




இதையும் படிங்க : உலகின் கடினமான கல்வி முறை கொண்ட 10 நாடுகள்; இவை தான்.. லிஸ்ட் இதோ
டொனால்ட் டிரம்ப் எக்ஸ் பதிவு
( @realDonaldTrump – Truth Social Post )
( Donald J. Trump – Nov 19, 2025, 8:29 PM ET )Communist Mayor of New York City, Zohran “Kwame” Mamdani, has asked for a meeting. We have agreed that this meeting will take place at the Oval Office on Friday, Nov… pic.twitter.com/Q6K6gMoBb6
— Donald J Trump Posts TruthSocial (@TruthTrumpPost) November 20, 2025
இது குறித்து டிரம்ப் தனது எக்ஸ் பதிவி கூறியுள்ளதாவது, நியூயார்க் மேயர் மம்தானி என்னை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். நாங்கள் இந்த சந்திப்புக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளோம். இந்த சந்திப்பு நவம்பர் 21, 2025 அன்று வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் பிரதமர்.. ஷேக் ஹசீனாவை உடனடியாக வங்கதேசத்திற்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை
மம்தானி மற்றும் டிரம்புக்கு இடையே கடும் வார்த்தை போர் நீடித்த நிலையில், தற்போது அவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.