Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மிஸ் யுனிவர்ஸ் 2025.. டாப் 12-ல் இடம்பெறாத இந்தியா.. கிரீடத்தை தட்டி தூக்கிய மெக்சிகோ அழகி!

Miss Universe Pageant 2025 | 2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்றது. இதில் மெக்சிகோவை சேர்ந்த பாத்திமா போஸ் என்ற 25 வயது இளம் பெண் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.

மிஸ் யுனிவர்ஸ் 2025.. டாப் 12-ல் இடம்பெறாத இந்தியா.. கிரீடத்தை தட்டி தூக்கிய மெக்சிகோ அழகி!
பாத்திமா போஸ் மற்றும் மனிக்கா விஸ்வகர்மா
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Nov 2025 11:03 AM IST

பாங்காக், நவம்பர் 21 : ஒவ்வொரு ஆண்டும் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெறும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி (2025 Miss Universe Pageant) தாய்லாந்தின் பாங்காக் பகுதியில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஒவ்வொரு உலக நாடுகளின் சார்பாகவும் அழகிகள் பங்கேற்றனர். அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த மனிக்கா விஸ்வகர்மா (Manika Vishwakarma) என்ற அழகியும் இந்த போட்டியில் பங்கேற்றார். இந்த நிலையில், தற்போது போட்டியின் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெற்றது யார், இந்தியா தக்கவைத்த இடன் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2025 ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டி முடிவுகள் அறிவிப்பு

74வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி (74th Miss Universe Pageant) பாங்காக்கில் நடைபெற்று வந்த நிலையில், மெக்சிகோவை சேர்ந்த பாத்திமா போஸ் (Fatima Bosch) என்ற பெண் 2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் ஆக மகுடம் சூடியுள்ளார். 25 வயதான அந்த இளம் பெண் மிஸ் யுனவர்ஸ் பட்டம் பெற்று அசத்தியுள்ளார். அவருக்கு 2024 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனவர்ஸ் பட்டம் பெற்ற விக்டோரியா கிரீடம் சூடினார். தான் 2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றது குறித்து பாத்திமா உணர்ச்சி வசம் அடைந்த நிலையில், அவரது சக போட்டியாளர்கள் அவரை உற்சாகப்படுத்தும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : இலங்கையில் பாலியல் தொல்லை.. நியூசிலாந்து பெண் சுற்றுலா பயணி வேதனையுடன் வெளியிட்ட வீடியோ!

மிஸ் யுனிவர்ஸ் – உணர்ச்சி பொங்க கத்தி சொன்ன பாத்திமா போஸ்

 

View this post on Instagram

 

A post shared by Miss Universe (@missuniverse)

இந்தியாவுக்கு எந்த இடம்?

2025 ஆம் ஆண்டுக்கான இந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் உலக அளவில் சுமார் 120 அழகிகள் பங்கேற்றனர். அவர்கள் ஒற்றுமை, வளர்ச்சி, எழுச்சி ஆகியவற்றை மையப்படுத்தி தேர்வு செய்யப்பட்டனர். இந்த போட்டியில் மெக்சிகோ அழகியான பாத்திமா போஸ் கிரீடம் சூடியுள்ள நிலையில், இந்தியாவை சேர்ந்த மனிக்கா விஸ்வகர்மா முதல் 12 இடங்களில் இடம்பெற தவறியுள்ளார்.

இதையும் படிங்க : உலகின் கடினமான கல்வி முறை கொண்ட 10 நாடுகள்; இவை தான்.. லிஸ்ட் இதோ

முதல் 4 இடங்களை பிடித்த அழகிகள்

  • தாய்லாந்தை சேர்ந்த பர்வீனா சிங் (Parveena Singh) முதல் ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • வெனிசுலாவை சேந்த ஸ்டெஃபானி அபாசலி (Stephany Abasali) இரண்டாவது ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • பிலிப்பைன்ஸை சேர்ந்த அதிசா மனோலா (Athisa Manola) மூன்றாவது ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • ஐவரி கோஸ்ட் பகுதியை சேர்ந்த ஒலிவியா யேஸ் (Olivia Yace) நான்காவது ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.