இலங்கையில் பாலியல் தொல்லை.. நியூசிலாந்து பெண் சுற்றுலா பயணி வேதனையுடன் வெளியிட்ட வீடியோ!
New Zealand Tourist Worst Experience in Sri Lanka | நியூசிலாந்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து அவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
கொழும்பு, நவம்பர் 19 : நியூசிலாந்து (New Zealand) நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இலங்கையில் (Sri Lanka) தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர், தனது பயணத்தை வீடியோ பதிவு செய்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அவர் இலங்கையில் இருந்த மூன்று நாட்கள் அவருக்கு மிகவும் சிறப்பான அனுபவம் கிடைத்துள்ளது. ஆனால், நான்காவது நாள் அவருக்கு மிகவும் கசப்பான மற்றும் அறுவறுக்கத்தக்க அனுபவம் கிடைத்துள்ளது. அது குறித்து அந்த பெண் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அந்த வீடியோ மிக வேகமாக வைரலாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
தனக்கு நடந்த கொடூரம் குறித்து வீடியோ பதிவிட்ட சுற்றுலா பயணி
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அந்த பெண் கூறியுள்ளதாவது, நான் ஆட்டோவில் பயணம் செய்துக்கொண்டு இருந்தேன். அப்போது ஒரு நபர் எனது ஆட்டோவை பின்தொடர்ந்து வந்தார். நான் ஏதேனும் சாப்பிடலாம் என்பதற்காக ஆட்டோவை நிறுத்தினேன். ஆட்டோ நின்றதும் அந்த நபர் அருகில் வந்து பேச தொடங்கினார். அவர் பேசும்போது நட்பாக பேசுவதை போல தான் இருந்தது. ஆனால், அவர் பிறகு நான் எங்கு தங்கி இருக்கிறேன் என கேட்டார். அவர் ஏன் அப்படி கேட்கிறார் எனக்கு புரிந்தது. இதற்கிடையே அந்த நபர் எனது கண் முன்னே ஆபாச செயலில் ஈடுபட தொடங்கினார்.
இதையும் படிங்க : Bus Accident In Madina : ஹஜ் பயணிகள் பேருந்து எரிந்து விபத்து.. 42 இந்தியர்கள் பலி என தகவல்!




மனஉறுதியை குறைத்த சம்பவம் – பெண் சுற்றுலா பயணி வேதனை
இந்த சம்பவம் எனது சுற்றுலாவை தடுப்பதை நான் நிறுத்த மாட்டேன். ஆனால், இது எனது மன உறுதியை குறைத்துவிட்டது. தனியாக பயணம் செய்யும் பெண்களின் பெரிய சவாலாக இது உள்ளது. இந்த ஒற்றை சம்பவம் ஒட்டுமொத்த இலங்கையையும் பிரதிபலிக்காது. நான் சந்தித்த உள்ளூர் இலங்கை மக்கள் மிகவும் அன்பானவர்கள் என்று அந்த பெண் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : சீனா மற்றும் லடாக்கில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. அச்சத்தில் பொதுமக்கள்!
மன்னிப்பு கேட்ட இலங்கை வாசிகள்
வெளிநாட்டு சுற்றுலா பயணி பெண் தனக்கு நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் குறித்து மிகுந்த மன வேதனையுடன் வீடியோ பதிவிட்டுள்ள நிலையில், அந்த வீடியோவின் கீழ் இலங்கை சார்பாக மன்னிப்பு கேட்பதாக பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர். அந்த பெண்ணிடம் ஆபாச செயலில் ஈடுபட்ட அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.