Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வானத்தில் மாயா ஜாலம்.. இத்தாலி வானத்தை சிவக்க செய்த அரோரா.. பிரம்மிக்க வைக்கும் நிகழ்வு!

Aurora Lights In Italy | இத்தாலியில் அரிய வானியல் நிகழ்வான அரோரா வானில் தோன்றியுள்ளது. இதனை கண்டு பொதுமக்கள் கடும் உற்சாகத்திற்கு ஆளான நிலையில், அது தொடர்பான வீடியோக்களை பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அவை தற்போது வைரலாகி வருகின்றன.

வானத்தில் மாயா ஜாலம்.. இத்தாலி வானத்தை சிவக்க செய்த அரோரா.. பிரம்மிக்க வைக்கும் நிகழ்வு!
அரோரா
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Nov 2025 23:37 PM IST

ரோம், நவம்பர் 14 : ஆர்க்டிக் (Arctic) மற்றும் அண்டார்ட்டிக் (Antarctic) பிரதேசங்களில் உயரமான பகுதிகளில் அரோரா (Aurora) என்ற அரிய இயற்கை நிகழ்வு காணப்படுகிறது. இந்த நிகழ்வு வட துருவத்தில் காணப்படும் போது அரோரா போரியாலிஸ் (Aurora Borealis) என்றும் அதுவே தென் துருவத்தில் காணப்படும்போது அரோரா ஆஸ்ட்ராலிஸ் (Aurora Australis) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வின்போது வானம் ஒளிக்கதிர்களால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் பிரம்மாண்டமாக தோன்றும்.

வானத்தில் மாயா ஜாலம் ஏற்படுத்தும் அரோரா

குறிப்பாக இந்த அரோரா நிகழ்வு வானத்தில் தோன்றும்போது வண்ண திரைகளால் அலங்கரிப்பது போல் ஒளிக்கதிர்கள் சுருள் வடிவத்திலோ, மினுமினுக்கும் ஒளி வடிவங்களிலோ தோன்றும். இந்த ஒளிக்கதிர்கள் சிவப்பு, பச்சை என பல வண்ணங்களில் தோன்றும். இத்தகைய வியக்கத்த வானியல் நிகழ்வான அரோரா வடதுருவ நாடுகளான நார்வே, சுவீடன், பின்லாந்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, கனடா மற்றும் அலஸ்கா ஆகிய நாடுகளில் வானில் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

இதையும் படிங்க : ஜப்பானை உலுக்கிய மிக கடுமையான நிலநடுக்கம்.. சுமானி எச்சரிக்கை!

வானத்தில் நிகழும் பேரழகும், அதிசயமும்

வடதுருவ பகுதிகள் மட்டுமன்றி வட அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் உயரமான பகுதிகளிலும் அரோரா வானியல் நிகழ்வு தென்படுகிறது. இந்தியாவிலும் இந்த அரோரா நிகழ்வு காணப்படுகிறது. அதாவது லடாக் உள்ளிட்ட சில பகுதிகளில் மிகவும் அரிதாக அரோர நிகழ்வு காணப்படுகிறது.

இதையும் படிங்க : விமானத்தில் நடுவானில் மயங்கிய பயணி.. உயிரை காக்க போராடிய மருத்துவர்கள்.. திடுக் நிமிடங்கள்

இணையத்தில் வைரலாகும் அரோரா வீடியோக்கள்

அந்த வகையில் இந்தாலியின் ஆஸ்டா பள்ளத்தாக்கில் நேற்று (நவம்பர் 13, 2025) அரோரா நிகழ்வு காணப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது வானம் செக்க சிவந்து காணப்பட்டுள்ளது. இதனை அந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டு களித்துள்ளனர். இது தொடர்பாக அங்கு இருந்த நபர்கள் பதிவு செய்து இணையத்தில் பதிவிட்ட வீடியோக்கள் சில வைரலாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.