Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜப்பானை உலுக்கிய மிக கடுமையான நிலநடுக்கம்.. சுமானி எச்சரிக்கை!

Strongest Earthquake Strikes Japan | ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டில் உள்ள ஹொன்சு தீவில் அமைந்துள்ள இவாதே மாகாணத்தில் நேற்று (நவம்பர் 09, 2025) மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானை உலுக்கிய மிக கடுமையான நிலநடுக்கம்.. சுமானி எச்சரிக்கை!
6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Nov 2025 08:34 AM IST

டோக்கியோ, நவம்பர் 10 : ஜப்பான் (Japan) தலைநகர் டோக்கியோவில் (Tokyo) நேற்று (நவம்பர் 09, 2025) மாலை மிக கடுமையான நிலநடுக்கம் (Strongest Earthquake) ஏற்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் கடுமையானதாக இருந்த நிலையில், வீடுகள் மற்றும் கட்டடங்கள் கடுமையான அதிர்வை சந்தித்துள்ளன. இந்த நிலையில், ஜப்பானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜப்பானை உலுக்கிய மிக கடுமையான நிலநடுக்கம்

ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டில் உள்ள ஹொன்சு தீவில் இவாதே மாகாணம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கிழக்கு கடற்கரையில் நேற்று (நவம்பர் 09, 2025) மாலை சரியாக 5.12 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் (NCS – National Center for Seismology) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் மிக கடுமையாக இருந்த நிலையில், அங்கு வீடுகள் மற்றும் கட்டடங்கள் மிக கடுமையான அதிர்வுகளை எதிர்க்கொண்டன. இதனால் வீடுகளை விட்டு அலறி அடித்துக்கொண்டு வெளியேறிய பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இதையும் படிங்க : மக்களை ஏமாற்றுவதற்காக தவறாக எனது புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளனர்.. பிரேசில் மாடல் விளக்கம்!

6.8 ரிக்டர் அளவில் ஜப்பானை தாக்கிய நிலநடுக்கம்

இவாதே மாகாணத்தின் கடற்கரையில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் மாலை 5.12 மணி அளவில் சுமானி அலைகள் எழுந்துள்ளன. அந்த அலைகள் விரைவில் கடற்கரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் 3 அடி வரை கடல் அலைகள் எழும்ப கூடும் என அந்த பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நைட் ஷிபிடில் வேலை அதிகமாக இருந்ததால் ஆத்திரம்.. 10 நோயாளிகளை கொலை செய்த நர்ஸ்.. ஆயுள் தண்டனை!

மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேறும் படி அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.