நைட் ஷிபிடில் வேலை அதிகமாக இருந்ததால் ஆத்திரம்.. 10 நோயாளிகளை கொலை செய்த நர்ஸ்.. ஆயுள் தண்டனை!
Life Imprisonment to Male Nurse | ஜெர்மனியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஒருவர் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு இரவு நேர ஷிப்ட் வழங்கப்பட்டு வந்ததால் வேலை பளு காரணமாக அவர் 10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்துள்ளார்.
பெர்லின், நவம்பர் 07 : ஜெர்மனியில் (Germany) மருத்துவமனை ஒன்றில் இரவு நேர பணி செய்து வந்த நர்ஸ் ஒருவர், நைட் ஷிப்டில் (Night Shift) வேலை அதிகமாக இருப்பதால் 10 நோயாளிகளை கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி, அவர் மேலும் 27 கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பணி சுமை காரணமாக நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
10 நோயாளிகளை கொலை செய்த நர்ஸ்
ஜெர்மனியின் மேற்கு பகுதியில் ஊர்சிலன் என்ற இடம் உள்ளது. இங்குள்ள மருத்துவமனை ஒன்றில் ஒருவர் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு நர்சிங் படிப்பை முடித்த அவர், பல்வேறு மருத்துவமனைகளில் நர்சாக பணியாற்றி வந்த நிலையில், கடைசியாக சம்பவம் நடைபெற்ற மருத்துவமனையில் பணி செய்து வந்துள்ளார். அதாவது 2020 ஆம் ஆண்டு ஊர்சிலின் நகரில் உள்ள அந்த மருத்துவமனையில் அவர் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்த நிலையில், அங்கு அவருக்கு இரவு நேர பணி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்.. அலறி அடித்துக்கொண்டு சாலை ஓரத்தில் தஞ்சமடைந்த பொதுமக்கள்!




10 பேரை கொலை செய்த நர்ஸ்
இரவு நேர பணியில் ஆட்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் பணி அதிகமாக இருக்கும். அவ்வாறு அந்த நர்சுக்கு அதிக பணி சுமை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் 10 நோயாளிகளை கொலை செய்துள்ளார். அதாவது, நோயாளிகளை அவர் பெயின் கில்லர் மற்றும் மயக்க மருந்து தொடர்பான ஊசிகளை செலுத்தி அவர் அவர்களை கொலை செய்து வந்துள்ளார். அந்த 10 நோயாளிகளை கொலை செய்தது மட்டுமன்றி, அவர் மேலும் 27 பேரை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க : எகிப்தில் 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த பிரம்மாண்ட அருங்காட்சியகம் திறப்பு.. அப்படி என்ன சிறப்புகள் உள்ளன?
இந்த சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகி நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில், அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த நர்ஸ் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.