இரண்டு பச்சிளம் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம்!
Mother Killed Two Infants and Herself | பெங்களூரில் பெண் ஒருவர் தனது இரண்டு பச்சிளம் குழந்தைகளை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் தானும் அதே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு, நவம்பர் 02 : பெங்களூரில் (Bengaluru) இரண்டு பச்சிளம் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய், பின்னர் தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டதன் காரணம் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த பெண் தானும் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம் தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
இரண்டு பச்சிளம் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்
கர்நாடகா (Karnataka) மாநிலம், மைசூரு (Mysore) மாவட்டம், பேட்டபுரா பகுதியை சேர்ந்தவர் சயது முசவீர். இவருக்கு திருமணமாகி அபியா பானு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு பாத்திமா என்ற 1.5 வயது குழந்தையும், பிறந்து வெறும் பத்து நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையும் இருந்துள்ளது. இந்த தம்பதிக்கு முதலில் பிறந்த குழந்தை மாற்று திறனாளி. இந்த நிலையில், இரண்டாவது குழந்தை பெண்ணாக பிறந்த நிலையில், அது கணவன் மனைவிக்கு இடையே சண்டையை ஏற்படுத்தி வந்துள்ளது. இதன் காரணமாக அபியா கடும் மன உளைச்சளில் இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க : ஆந்திராவில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – 10 பேர் பலி – அதிர்ச்சி சம்பவம்




தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துக்கொண்ட கொடூரம்
கடும் மன உளைச்சல் காரணமாக அபியா அக்டோபர் 31, 2025 அன்று தனது கணவர் வேலைக்கு சென்றதும், இரண்டு பச்சிளம் குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனால், குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியாகியுள்ளனர். அதனை தொடர்ந்து அபியா தானும் அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். ’
இதையும் படிங்க : மாந்திரீகத்தில் அதிக ஈடுபாடு.. சடங்கு செய்ய மறுத்ததால் மனைவியின் முகத்தில் சுட சுட மீன் குழம்பை ஊற்றிய கணவன்!
இது குறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசா கொலைகள் மற்றும் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.