Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டிஜிட்டல் கைது மோசடி.. முதியவரிடம் ரூ.50 லட்சம் கொள்ளையடித்த கும்பல்!

Elderly Man Loses 50 Lakh Rupees in Scam | இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் மும்பையை சேர்ந்த முதியவர் ஒருவர் டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கி ரூ.50 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

டிஜிட்டல் கைது மோசடி.. முதியவரிடம் ரூ.50 லட்சம் கொள்ளையடித்த கும்பல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 30 Oct 2025 08:42 AM IST

மும்பை, அக்டோபர் 30 : டிஜிட்டல் கைது (Digital Arrest) என்ற பெயரில் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான மோசடி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் இதற்கு ஏராளமான பொதுமக்கள் இறையாகி தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். இந்த டிஜிட்டல் மோசடிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றுக்கு தீர்வு கிடைத்தபாடில்லை. இந்த நிலையில், மும்பையை (Mumbai) சேர்ந்த முதியவர் ஒருவர் இந்த டிஜிட்டல் கைது மோசடியில் (Digital Arrest Scam) சிக்கி ரூ.50 லட்சம் பணத்தை இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் கைது மோசடி – ரூ.50 லட்சம் பணத்தை இழந்த முதியவர்

மராட்டிய மாநிலம், மும்பையை சேர்ந்தவர் முதியவர். இவர் அக்டோபர் 09, 2025 அன்று காவல் நிலையத்தி புகார் ஒன்றை அளித்திருந்தார். ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான அவரை டிஜிட்டல் கைது மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்ப்புக்கொண்டுள்ளனர். வாட்ஸ்அப் மற்றும் வீடியோ கால் மூலம் பேசிய அவர்கள் தங்களை அதிகாரிகள் போல் காட்டிக்கொண்டு முதியவரை ஏமாற்றியுள்ளனர். அதாவது, செப்டபர் 11, 2025 முதல் செப்டம்பர் 24, 2025 வரையிலான காலக்கட்டத்தில் அந்த கும்பல் முதியவரிடம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது.

இதையும் படிங்க : ரீல்ஸ் எடுக்கும்போது ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ.. வைரலாகும் வீடியோ!

முதியவரிடம் மோசடி நடைபெற்றது எப்படி?

முதியவரை தொடர்புக்கொண்ட மோசடி கும்பல், அவருக்கு பண மோசடி வழக்கில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். அதுமட்டுமன்றி, முதியவர் நம்ப வேண்டும் என்பதற்காக அரசாங்கத்தின் முத்திரைகள் பதிக்கப்பட்ட ஆவணங்களையும் அவர்கள் காட்டியுள்ளனர். இவ்வாறு முதியவரை தொடர்ந்து 10 நாட்கள் மிரட்டி அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரூ.50 லட்சம் வரை பணம் பறித்துள்ளனர்.

இதையும் படிங்க : முன்னாள் காதலனுடன் இணைந்து லிவ் இன் காதலனை கொன்ற பெண்.. பகீர் சம்பவம்!

குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த போலீசார்

தன்னிடம் இருந்து ரூ.50 லட்சம் பணத்தை வாங்கிய நிலையில், அவர்கள் தன்னை மீண்டும் தொடர்புக்கொள்ளாததால் தான் மோசடி செய்யப்பட்டது குறித்து முதியவர் உணர்ந்துள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த முதியவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்ததில் ரவி அனந்தா மற்றும் சந்திரகாந்த் ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இதுபோன்று பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.