முன்னாள் காதலனுடன் இணைந்து லிவ் இன் காதலனை கொன்ற பெண்.. பகீர் சம்பவம்!
Woman Killed Live In Partner | டெல்லியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், ஒரு இளைஞருடன் லிவ் இன் உறவில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த இளைஞரை தனது முன்னாள் காதலனுடன் இணைந்து கொலை செய்துவிட்டு விபத்து போல சித்தரித்துள்ளார்.
புதுடெல்லி, அக்டோபர் 28 : டெல்லியில் (Delhi) உள்ள காந்தி விகார் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் நான்காவது மாடியில் அட்கோபர் 06, 2025 அன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீயை முழுமையாக அணைத்த நிலையில், தீயணைப்பு துறையினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ராம்கேஷ் மீனா என்ற 32 வயது நபர் உடல் கருகி பலியாகி கிடந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னாள் காதலனுடன் இணைந்து லிவ் இன் காதலனை கொன்ற பெண்
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்துள்ளனர். அதில் முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் ராம்கேஷ் மீனாவின் விட்டிற்கு செல்வதும், பிறகு சிறிது நேரம் கழித்து அவர்கள் வெளியே வருவதும் பதிவாகி இருந்துள்ளது.
இதையும் படிங்க : சாலையோரம் நின்ற ஆட்டோ.. போர்வை சுற்றி வைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு!




அவர்கள் இருவரும் யார் என்று போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், அவர்கள் இருவரில் ஒருவர் ராம்கேஷ் மீனாவின் காதலி என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், அந்த பெண் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த பெண் தனது லிவ் இன் காதலானான ராம்கேஷ் மீனாவை தனது முன்னாள் காதலனுடன் இணைந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
புகைப்படங்களை வைத்து மிரட்டியதால் கொலை செய்ய முடிவு செய்த பெண்
போலீசாரின் விசாரணையில் தனது காதலன் தனது அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டியதாக அந்த பெண் கூறியுள்ளார். இது குறித்து தனது முன்னாள் காதலனிடம் கூறியபோது அவர்தான் ராகேஷ் மீனாவை கொலை செய்ய கூறினார் என்றும் அந்த பெண் கூறியுள்ளார். இந்த நிலையில், இது தொடர்பாக திட்டம் தீட்டிய அந்த பெண் தனது முன்னாள் காதலனுடன் ராகேஷ் மீனாவின் வீட்டிற்கு சென்று அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பிறகு கேஸ் சிலிண்டரை திறந்து வைத்து தீ விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : தலைதூக்கும் சைபர் மோசடி: ரூ.1,500 கோடி அபேஸ்.. பகீர் ரிப்போர்ட்!
இளம் பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இருவரையும் கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.