AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Earthquake : மும்பையை உலுக்கிய திடீர் நிலநடுக்கம்.. பீதியில் பொதுமக்கள்!

3.9 Magnitude Earthquake Hits Mumbai | மும்பையில் நேற்று (அக்டோபர் 25, 2025) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்க பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த வித தகவலும் வெளியாகாமல் உள்ளது.

Earthquake : மும்பையை உலுக்கிய திடீர் நிலநடுக்கம்.. பீதியில் பொதுமக்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 26 Oct 2025 08:42 AM IST

மும்பை, அக்டோபர் 26 : மும்பையில் (Mumbai) நேற்று (அட்கோபர் 25, 2025) திடீர் நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது (NCS – National Center for Seismology). அங்கு ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் காரணமாக, பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த நிலையில், மும்பையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மும்பையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு

மராட்டிய மாநிலம், ஹிங்கோலி பகுதியில் நேற்று (அட்கோபர் 25, 2025) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சரியாக மதியம் 3.36 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு செய்யப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 19.53 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 77.22 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் முதலில் இருக்கும் என தீர்மானம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க : வரதட்சணை கொடுமை.. திருமணமான 6 மாதங்களில் இளம் பெண் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்!

திடீர் நிலநடுக்கத்தால் பீதியில் உறைந்த பொதுமக்கள்

இந்த நிலநடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் கட்டடங்கள் லேசாக குலுங்கியுள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் மிகவும் லேசான அளவில் இருந்த நிலையில், அங்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : துக்க வீட்டில் உணவு சாப்பிட்ட 5 பேர் அடுத்தடுத்து பரிதாப பலி.. அதிர்ச்சி சம்பவம்!

மும்பையில் நேற்று (அட்கோபர் 25, 2025) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக தகவல் எதுவும் இதுவரை வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us