துக்க வீட்டில் உணவு சாப்பிட்ட 5 பேர் அடுத்தடுத்து பரிதாப பலி.. அதிர்ச்சி சம்பவம்!
5 Dead After Eating Food From Funeral House | சத்தீஸ்கரில் இறந்துப்போன நபரின் வீட்டில் அவருக்காக இறுதி சடங்குகள் நடைபெற்றுள்ளன. அப்போது அங்கு உணவு பரிமாறப்பட்டுள்ளது. அந்த உணவை சாப்பிட்டவர்கள் ஒரு வார காலத்திற்குள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ராய்ப்பூர், அக்டோபர் 25 : சத்தீஸ்கரில் (Chhattisgarh) இறந்துபோன நபரின் இறுதி சடங்கில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவு சாப்பிட்ட நபர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட தொடங்கிய நிலையில், அவர்கள் ஒருவர் பின் ஒருவராக உயிரிழக்க தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், துக்க வீட்டில் உணவு சாப்பிட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
துக்க வீட்டில் உணவு சாப்பிட்ட 5 பேர் பரிதாப பலி
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ளது துங்கா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் அந்த நபருக்காக சடங்குகளை செய்துள்ளனர். அதுமட்டுமன்றி, உயிரழந்த நபரின் வீட்டின் சார்பி ஊர் மக்கள் மற்றும் உறவினர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. அந்த உணவை சடங்கில் பங்கேற்றவர்கள் சாப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : அசாம் ரயில் தண்டவாளத்தில் நள்ளிரவில் குண்டு வெடிப்பு.. அதிர்ச்சி சம்பவம்!
உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி
இறந்தவர்களின் வீட்டில் உணவு பரிமாறுவது இயல்பான ஒன்றுதான் என்ற நிலையில், பலர் அந்த உணவை சாப்பிட்டுள்ளனர். ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்ட ஒருசில நிமிடங்களிலேயே வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு விழ தொடங்கியுள்ளனர். அவற்றை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஊர்மிளா என்ற 25 வயது இளம் பெண் தனது இரண்டு மாத குழந்தையுடன் பரிதாபமாக பலியானார்.
இதையும் படிங்க : Kurnool Accident: பைக் மீது மோதி தீப்பிடித்த பேருந்து.. 20 பேர் பலி?
அடுத்தடுத்து பலியான 5 பேர்
அந்த இளம் பெண் மற்றும் அவரது குழந்தை பலியானதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதாரி என்ற 25 வயது நபர், புத்தாராம் என்ற 24 வயது நபர், லக்கே என்ற 45 வயது நபர் என 5 பேர் அடுத்தடுத்து ஒரு வார இடைவெளிக்குள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.