Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சாலையோரம் நின்ற ஆட்டோ.. போர்வை சுற்றி வைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு!

Woman Dead Body Found Inside the Auto | பெங்களூரில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோ ஒன்றில் போர்வை போர்த்திய நிலையில் இருந்த பெண் சடலத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையோரம் நின்ற ஆட்டோ.. போர்வை சுற்றி வைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Oct 2025 07:22 AM IST

பெங்களூரு, அக்டோபர் 27 : கர்நாடகா (Karnataka) மாநிலம், பெங்களூரில் (Bengaluru) உள்ள தில்நகர் பகுதியில் சாலையோரத்தில் வெகு நேரமாக ஆட்டோ ஒன்று நின்றுக்கொண்டு இருந்துள்ளது. அந்த ஆட்டோவில் ஏதோ ஒன்று போர்வையால் சுற்றி வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனை கண்டு சந்தேகமடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக அது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆய்வு செய்த போது தான் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

ஆட்டோவில் போர்வையில் சுற்றி வைக்கப்பட்டு இருந்த பெண் சடலம்

போலீசார் ஆட்டோவில் போர்வை சுற்றி வைக்கப்பட்டு இருந்த பொருளை ஆய்வு செய்த போது அதில் பெண்ணின் சடலம் இருந்துள்ளது. அது போலீசார் மற்றும் அந்த பகுதி பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பெண்ணின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண் யார், அவரது சடலம் போர்வையில் சுற்றப்பட்டு ஆட்டோவில் வைக்கப்பட்டதன் காரணம் என்ன அன்பது குறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : நடுவானில் பறந்தபோது மோதிய பறவை.. அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. பயணிகள் பீதி!

விசாரணையில் தெரிய வந்த தகவல்கள்

பெண்ணின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அவர் பெயர் சல்மா என்பதும் அவருக்கு திருமணமாகி நான்கு பிள்ளைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. சல்மாவின் கணவர் சமீபத்தில் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் சல்மாவின் சடலம் ஆட்டோவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் தலையில் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டதற்கான அடையாளம் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்

இதையும் படிங்க : வரதட்சணை கொடுமை.. திருமணமான 6 மாதங்களில் இளம் பெண் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்!

குற்றவாளியை வலைவீசி தேடி வரும் காவல்துறை

மேலும், தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவுகளுக்காக போலீசார் காத்திருக்கின்றனர். இதற்கிடையே அந்த பெண்ணை கொலை செய்து ஆட்டோவில் வீசி சென்றது யார் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.