Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து ஏமாற்றிய இளைஞர்.. இளம் பெண் பரபரப்பு புகார்!

Andhra Woman Complaint on Love Issue | ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர், பெங்களூருவை சேர்ந்த இளைஞர் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், இளம் பெண்ணின் புகாரில் உள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து ஏமாற்றிய இளைஞர்.. இளம் பெண் பரபரப்பு புகார்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 24 Oct 2025 07:58 AM IST

பெங்களூரு, அக்டோபர் 24 : ஆந்திர (Andhra) மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், பெங்களூருவை (Bengaluru) சேர்ந்த முகமது ஈசாக் என்ற ஒரு இளைஞருக்கும் 2024 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், இளம் பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாகவும் அந்த இளைஞர் உறுதி அளித்துள்ளார். இதற்கிடையே அந்த பெண் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதை காரணம் காட்டி, ஈசாக் திருமணம் செய்துக்கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காதலித்து ஏமாற்றிய இளைஞர் – இளம் பெண் பரபரப்பு புகார்

இளம் பென் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, முகமது ஈசாக்குக்கும், எனக்கும் 2024 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை காதலிப்பதாக கூறினார். இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் என்னை பெங்களூருக்கு வரும்படி அவர் அழைத்தார். நான் அங்கு சென்ற நிலையில், விடுதியில் அரை எடுத்து உல்லாசம் அனுபவித்தார். அதனை தொடர்ந்து பலமுறை என்னை பெங்களூருக்கு அழைத்து உல்லாசம் அனுபவித்தார்.

இதையும் படிங்க : தொல்லை கொடுத்த மனைவி.. திருமணமான 5 மாதங்களில் புது மாப்பிள்ளை தற்கொலை!

வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருந்த ஈசாக்

இதற்கிடையே ஈசாக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரிய வந்தது. இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது அவர் என்னிடம் தகராறு செய்தார். மேலும் என்னை திருமணம் செய்துக்கொள்ள அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். அதுமட்டுமன்றி, கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால் நான் தற்கொலைக்கு முயன்றேன். அப்போது அவரது குடும்பத்தினர் என்னை அழைத்து சமாதானம் பேசினர் என்று அந்த பெண் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்.. கோடாரியால் தலையில் அடித்து கொலை செய்த காதலன்!

இஸ்லாம் மதத்திற்கு மாறினால் மட்டுமே திருமணம்

இந்த சூழலில் இஸ்லாமிய மதத்திற்கு மாறினால் தான் திருமணம் செய்துக்கொள்வேன் என்று ஈசாக் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறிவிட்டனர். ஆனால், நான் மதம் மாற மறுத்த நிலையில் தற்போது ஈசாக்குக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. வேறு மதத்தை சேர்ந்த என்னை காதலித்து, பாலியல் உறவில் இருந்துவிட்டு தற்போது மதம் மாறினால் தான் திருமணம் செய்துக்கொள்வேன் என மிரட்டுகிறார் என்று அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.