நடுவானில் பறந்தபோது மோதிய பறவை.. அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. பயணிகள் பீதி!
Air India Flight Emergency Landing | நாக்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று சென்றுக்கொண்டு இருந்துள்ளது. அப்போது நடுவானில் பறந்தபோது விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியுள்ளது. அதன் காரணமாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில், விமானம் தரையிறக்கப்பட்டது.
புதுடெல்லி, அக்டோபர் 26 : நாக்பூரில் (Nagpur) இருந்து டெல்லிக்கு (Delhi) ஏர் இந்தியா விமானம் (Air India Flight) ஒன்று புறப்பட்டு சென்ற நிலையில், அந்த விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியுள்ளது. இதன் காரணமாக விமானி, விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கியுள்ளார். இதனால் விமான பயணிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நடுவானில் பறந்தபோது விமானத்தின் மீது பறவை மோதியதால், விமானம் தரையிறக்கப்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடுவானில் பறந்தபோது மோதிய பறவை – அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
மராட்டிய மாநிலம், நாக்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது. அந்த ஏர் இந்தியா 466 ரக விமானம் நடு வானில் பறந்துக்கொண்டு இருந்தபோது அதன் மீது பறவை ஒன்று மோதியுள்ளது. இதனால், விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நிலமையின் தீவிரத்தை உணர்ந்த விமானி உடனடியாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க : துக்க வீட்டில் உணவு சாப்பிட்ட 5 பேர் அடுத்தடுத்து பரிதாப பலி.. அதிர்ச்சி சம்பவம்!
திடீரென தரையிறங்கிய விமானம் – பீதியில் உறைந்த பயணிகள்
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானி, விமானத்தை மீண்டும் நாக்பூரில் தரையிறக்கியுள்ளார். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் எந்த வித ஆபத்தும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர், விமான நிலையத்தில் இருந்த பொறியாளர்கள் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்துள்ளனர். அதன் பிறகு அனைத்து வித பாதுகாப்புகளையும் உறுதி செய்த பிறகு அந்த ஏர் இந்தியா விமானம், மீண்டும் பயணிகளுடன் புறப்பட்டு சென்றுள்ளது.
இதையும் படிங்க : ரயில் முன்பு நின்று ரீல்ஸ் எடுத்த சிறுவன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
விமானங்கள் மீது பறவைகள் மோதுவதால் ஏற்படும் சிக்கல்
விமானங்கள் நடுவானில் பறக்கும்போது அவற்றின் மீது பறவைகள் மோதுவது விமானத்தை சேதப்படுத்தும். இதன் காரணமாக பெரிய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு பறவைகள் மோதியதன் காரணமாக ஏராளமான விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ள நிலையில், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாக்பூரில் விமானம் மோதியதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



