Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரயில் முன்பு நின்று ரீல்ஸ் எடுத்த சிறுவன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

Teen Dies While Shooting Selfie Video Infront of Train | இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ரயில் முன்பு நின்று வீடியோ எடுத்த 15 வயது சிறுவன் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் முன்பு நின்று ரீல்ஸ் எடுத்த சிறுவன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 24 Oct 2025 14:54 PM IST

தற்போதைய காலக்கட்டத்தில் ஆபத்தான மற்றும் வித்தியாசமான சூழல்களில் ரீல்ஸ் எடுப்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இதற்காக பெரும்பாலான இளைஞர்கள் தங்களது உயிரையும் பணயம் வைத்து இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில், ஒடிசாவில் (Odisha) 15 வயது சிறுவர் ஒருவர் ரயில் முன்பு நின்று ரீல்ஸ் செய்த நிலையில், ரயில் மோதி பலியான வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயில் முன்பு நின்று ரீல்ஸ் எடுத்த சிறுவன் – ரயில் மோதி பரிதாப பலி

மகாராஷ்டிரா மாநிலம், மங்கல்காட் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுவனான விஸ்வஜித் சாஹு. இவர் தனது தாயுடன் தக்‌ஷன்காலி கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரி பகுதியில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நின்றுள்ளார். அங்கு அந்த சிறுவன் ரயிலுக்கு முன்பாக நின்றுக்கொண்டு செல்ஃபி வீடியோ எடுத்துள்ளார். அப்போது ரயில் மோதி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க : புதிய ரக தீபாவளி துப்பாக்கியால் பறிபோன குழந்தைகள் கண்பார்வை.. திடுக் சம்பவம்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், சிறுவன் ஒருவர் ரயில் தண்டவாளத்தின் மீது நின்றுக்கொண்டு இருக்கிறார். அப்போது அவருக்கு பின்னால் ரயில் ஒன்று வருகிறது. ரயில் தன்னை நெருங்கி வரும்போது அந்த சிறுவன் ஸ்மார்ட்போனை பார்த்தபடி திரும்பி நிற்கிறார். அப்போது ரயில் சிறுவன் மீது மோதிய நிலையில் அவர் கீழே விழுகிறார். அவர் கையில் வைத்திருந்த ஸ்மார்ட்போன் கீழே விழுகிறது. சிறுவன் கீழே விழுந்ததும் அங்கிருக்கும் பொதுமக்கள் ஓடி வந்து பார்க்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.