Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : சாலையோரத்தில் விழுந்த குட்டி யானை.. பதறிப்போன தாய் யானை.. அடுத்து நடந்தது என்ன?

Mother Elephant Rescues Baby Elephant | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்த நிலையில், தாய் யானை ஒன்று பள்ளத்தில் விழுந்த குட்டி யானையை தாய் யானை போராடி மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : சாலையோரத்தில் விழுந்த குட்டி யானை.. பதறிப்போன தாய் யானை.. அடுத்து நடந்தது என்ன?
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Oct 2025 23:07 PM IST

மனிதர்களை போலவே மிருகங்களும் தங்களது குட்டிகள் மீது மிகுந்த பாசமும் அக்கறையும் கொண்டு இருக்கும். அதிலும் தாய் மிருகங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். தங்களது குழந்தைகளுக்காக எந்த எல்லைக்குன் செல்லும். சில சமயங்களில் தங்களது உயிரை கூட கருத்தில் கொள்ளாமல் தங்களது குட்டிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும். அந்த வகையில், சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்த குட்டி யானையை தாய் யானை காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குட்டி யானையை காப்பாற்றிய தாய் யானை

விலங்கு இனத்திலேயே அதிக பாச உணர்வு, உணர்திறன் கொண்டவையாக யானைகள் உள்ளன. யானைகளுக்கு எந்த அளவுக்கு அதிக கோபம் வருமோ, அதே அளவுக்கு அவை மிகுந்த பாசம் கொண்ட உயிரினங்கள் ஆகும். இவ்வாறு அன்பின் மிகுதியால் யானைகள் செய்யும் சில அழகான விஷயங்கள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தாய் யானை ஒன்று குட்டியை காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : போலந்தை இந்தியாவுடன் ஒப்பிட்டு வீடியோ வெளியிட்ட இந்திய இளைஞர்.. இணையத்தில் வைரல்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், சாலையின் ஒரம் உள்ள பள்ளத்தில் குட்டி யானை ஒன்று சிக்கிக்கொண்டு இருக்கிறது. அதற்கு அருகே சாலையின் மீது தந்தை யானை நின்றுக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், பள்ளத்தின் கீழ் இறங்கி தாய் யானை குட்டியை மேலே எடுக்க முயற்சி செய்கிறது. ஒருவழியாக போராடி அந்த யானை தனது குட்டியை மேலே தூக்கிவிடுகிறது. பிறகு தாய் யானை, தந்தை யானை மற்றும் குட்டி யானை ஆகியவை இணைந்து சாலையை கடந்து காட்டுக்குள் செல்கின்றன. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : ஆன்லைனில் ஆஜரான வழக்கறிஞர்.. பெண்ணுக்கு முத்தமிட்டதால் சர்ச்சை.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.