Viral Video : ஆன்லைனில் ஆஜரான வழக்கறிஞர்.. பெண்ணுக்கு முத்தமிட்டதால் சர்ச்சை.. வைரல் வீடியோ!
Lawyer Kissed Woman on Online Appearance | தற்போதைய சூழலில் நீதிமன்ற விசாரணைக்கு ஆன்லைனில் ஆஜராக அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஆன்லைனில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர் பெண் ஒருவருக்கு முத்தமிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டது. முன்பெல்லாம் நேரில் சென்று செய்த வேலைகளை தற்போது ஆன்லைன் வாயிலாகவே மிக சுலபமாக செய்து முடித்துவிடலாம். மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்பது முதல், நீதிமன்றங்களில் ஆன்லைனில் ஆஜராவது வரை டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. தவிர்க்க முடியாத சூழல்களில் ஆன்லைனில் ஆஜராக நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. இந்த நிலையில், நீதிமன்ற விசாரணையின் போது ஆன்லைனில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், பெண் ஒருவரை முத்தமிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
ஆன்லைனில் ஆஜரான வழக்கறிஞர் – பெண்ணுக்கு முத்தமிட்டதால் சர்ச்சை
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தற்போது அனைத்துமே சாத்தியமாகிறது. அந்த வகையில், நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையின் போது ஆன்லைனில் ஆஜராக அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கறிஞர் ஒருவர் ஆன்லைனில் ஆஜராகியுள்ளார். அப்போது நீதிபதி வராததால் அனைவரும் காத்திருந்துள்ளனர். அப்போது ஆன்லைனில் ஆஜரான வழக்கறிஞர் பெண் ஒருவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : மலை ஏற Robotic Legs பயன்படுத்திய பெண்.. ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
Welcome to Digital India Justice 😂
Court is online… but judge forgot it’s LIVE! ☠️
When tech meets tradition
— and the camera off button loses the case! 🤣 pic.twitter.com/1GbfOFQ6w7— ShoneeKapoor (@ShoneeKapoor) October 15, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், நீதிமன்றத்தில் நீதிபதி வருவதற்காக அனைவரும் காத்திருக்கின்றனர். அந்த விசாரணைக்கு வழக்கறிஞர் ஒருவர் ஆன்லைனில் ஆஜராகியுள்ளார். அவர் கேமராவை விட்டு சற்று விலகி இருக்கிறார். இருப்பினும் அவரது முகம் பாதி தெரிகிறது. லேப்டாப் முன்பு சேரில் அமர்ந்திருக்கும் அந்த வழக்கறிஞர், தனக்கு அருகில் நின்றுக்கொண்டு இருக்கும் பெண்ணை அழைத்து முத்தமிடுகிறார். அது அந்த ஆல்னைனில் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : பாலில் குளித்து, கேக் வெட்டி விவாகரத்தை கொண்டாடிய நபர்.. வைரல் வீடியோ!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்த வழக்கறிஞரின் செயலை கண்டித்து கருத்து பகிர்ந்து வருகின்றனர்.