Viral Video : போலந்தை இந்தியாவுடன் ஒப்பிட்டு வீடியோ வெளியிட்ட இந்திய இளைஞர்.. இணையத்தில் வைரல்!
Indian Youngster Share Video on India's Honking Issue | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், இந்திய இளைஞர் ஒருவர் போலந்து சாலை போக்குவரத்து மற்றும் இந்திய போக்குவரத்து பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தனக்கென தனி விதிகளை பின்பற்றும். அந்த வகையில், பெரும்பாலான நாடுகளில் பொது இடங்களில் குப்பை போட கூடாது, ஓலி எழுப்ப கூடாது என சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் சில முக்கிய விதிகள் பின்பற்றப்படும். அந்த நாட்டின் அரசுகள் விதிகளை பிறப்பிப்பதுடன் மற்றும் நின்று விடாமல் அந்த நாட்டின் மக்கள் அந்த விதிகளை மிகவும் ஒழுக்கமாக கடைபிடிப்பர். இவ்வாறு வெளி நாடுகளில் பொதுமக்கள் மிக ஒழுக்கமாக இருப்பது தொடர்பான வீடியோக்கள் சில அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில் இந்திய இளைஞர் ஒருவர் போலாந்தின் சாலைகளில் வாகனங்கள் எப்படி செல்கின்றன என்பதை இந்தியாவுடன் ஒப்பிட்டு பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
போலாந்தை இந்தியாவுடன் ஒப்பிட்டு வீடியோ வெளியிட்ட இந்திய இளைஞர்
இந்தியாவில் சாலையில் வாகனங்களை ஓட்டுவதற்கு சில விதிகள் அமலில் உள்ளன. ஆனால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் அவற்றை கருத்தில் கொள்ள மாட்டார்கள். சாலையில் செல்லும்போது அவசியமின்றி ஒலிப்பெருக்கியை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட விதிகள் அமலில் இருந்தாலும், பெரும்பாலான பொதுமக்கள் கடுமையான போக்குவரத்து நெரிசல்களின் போது கூட ஒலிப்பெருக்கியை பயன்படுத்துவர். அதனை குறிப்பிட்டு தான் அந்த இளைஞர் வீடியோ பதிவிட்டுள்ளார். அதாவது போலந்தில் பொதுமக்கள் எவ்வாறு தேவைக்கு ஏற்ப ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துகின்றனர், இந்தியர்கள் எப்படி பயன்படுத்துகின்றனர் என்பது குறித்து அவர் கருத்து பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க : Viral Video : பாலில் குளித்து, கேக் வெட்டி விவாகரத்தை கொண்டாடிய நபர்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பேசியுள்ள இளைஞர், போலந்தில் சாலைகளில் வாகனங்கள் எப்படி செல்கின்றன என்பது குறித்து காட்டுகிறார். அந்த வீடியோவில் சாலையில் செல்லும் வாகனங்கள் மிக அமைதியாக எந்த வித ஒலியையும் ஏற்படுத்தாமல் செல்கின்றன. அது குறித்து பேசியுள்ள அந்த இளைஞர், போலந்தில் யாரும் தேவையில்லாமல் ஒலிப்பெருக்கியை பயன்படுத்த மாட்டார்கள். ஏதேனும் மிகவும் அவசர தேவை என்றால் மட்டுமே ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவார்கள். தேவை இல்லாமல் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது இங்கு குற்றமாக கருதப்படும். எனவே யாரும் அத்தகைய செயலை செய்ய மாட்டார்கள் என்று இந்திய சாலைகளை ஒப்பிட்டு அவர் பேசியுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : Nun வேடத்தில் கர்பா நடனமாடிய இளம் பெண்.. இணையத்தை கலக்கும் வீடியோ!
இளைஞரின் இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.