தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம்.. உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த தேர்தல் ஆணையம்!
Voter List Revision in Tamil Nadu | தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழகம் உள்ளிட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி, அக்டோபர் 24 : தமிழ்நாடு (Tamil Nadu) உள்ளிட்ட சட்டமன்ற தேர்தல்களை (Assembly Election) சந்திக்க உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் (Voter List) திருத்த பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) தெரிவித்துள்ளது. பீகாரில் தவறுதலாக 65 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது தேர்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அடுத்த வாரம் முதல் வாக்களர் பட்டியல் திருத்த பணிகள் தொடக்கம் – தேர்தல் ஆணையம்
பீகாரில் நவம்பர் 2025-ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன் விளைவாக, வெளியான வாக்களர் பட்டியலில் வெறும் 7 கோடியே 24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தது. மீதமுள்ள 65 லட்சம் வாக்களர்களின் பெயர்கள் பல்வேறு காரணங்களுக்காக நீக்கம் செய்ததாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படிங்க : Guruvayur Temple: தொடரும் அதிர்ச்சி.. குருவாயூர் கோயிலில் மிகப்பெரும் முறைகேடு!
நீக்கப்பட்டவர்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க உத்தரவு
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தவறுதலாக நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களின் பெயர்களை மீண்டும் பட்டியலில் இணைக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதையும் படிங்க : Droupadi Murmu: சபரிமலையில் பள்ளத்தில் சிக்கிய குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர்!
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



