பாத்ரூமில் குளிக்கச்சென்ற சகோதரிகள் மரணம்.. ஷாக் சம்பவம்!
2 sisters die due to LPG leakage in geyser: பாத்ரூமிற்கு ஒன்றாக குளிக்கச் சென்ற சகோதரிகள் இருவர் வாயு கசிந்து உயிரிழந்துள்ளனர். காற்றோட்டம் இல்லாத வகையில் அந்த பாத்ரூம் இருந்ததும், இந்த உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது. LPG வாட்டர் ஹீட்டரில் இருந்த வாயு கசிந்ததை அறியாமல் இருவரும் குறுகிய அறைக்குள் இருந்ததுமே காரணமாக அமைந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் மைசூரில் வீட்டு பாத்ரூமில் குளிக்கச் சென்ற சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நவீன காலத்தில் ஒருவருக்கு மரணம் எப்படி நேரும் என்பதை உணரவே முடியாத நிலையில் வாழ்ந்து வருகிறோம். வீட்டை விட்டு வெளியே சென்றால் தான் விபத்து அல்லது வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு மரணம் ஏற்படலாம் என்று நினைப்போம். அதனால், வீட்டிற்குள்ளேயே இருந்து விடவது பாதுகாப்பானது, நமக்கு எந்த ஆபத்தும் வராது என்று நினைப்போம். ஆனால், மைசூரில் சகோதரிகளுக்கு நடந்த இந்த சம்பவம் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது.
Also read: ரயில் முன்பு நின்று ரீல்ஸ் எடுத்த சிறுவன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
குளிர் காலத்தில் சாதாரண நீரில் குளிப்பது என்பது சற்று கடினமான காரியமே. அதனால், பெரும்பாலானோர் வீட்டில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவர். அவ்வாறு, வீட்டில் பயன்படுத்தப்படும் வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் நேரிடுவதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். இந்த வாட்டர் ஹீட்டர்கள் நாம் நினைத்த நேரத்திற்கு உடனடியாக சுடு தண்ணீரை கொடுக்கும் என்றாலும், அதை பயன்படுத்தும் விஷயத்தில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், பெரும் விளைவுகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இதில், எலக்ட்ரிக் ஹீட்டர்களை போலவே, LPG ஹீட்டர்களும் உள்ளன. அவை, இன்னும் கவனமாக பயன்படுத்த வேண்டிய ஒன்றாக உள்ளன.




அந்தவகையில், கர்நாடக மாநிலம் மைசூரின் பெரியபாட்னா பகுதியை சேர்ந்த சகோதரிகள் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தி குளிக்கும் போது வாயு கசிந்து உயிரிழந்துள்ளனர். குல்பாம் தாஜ் (23), சிம்ரன் தாஜ் (21) ஆகிய சகோதரிகள் இருவரும் வெளியே செல்வதற்காக விரைந்து கிளம்பலாம் என ஒரே பாத்ரூமில் குளிக்கச் சென்றுள்ளனர். ஆனால், எதிர்பாராத விதமாக பாத்ரூமில் இருந்த LPG வாட்டர் ஹீட்டரில் வாயு கசிந்துள்ளது. அதனை சுவாசித்த இருவரும் அங்கேயே மயங்கி உயிரிழந்தனர்.
Also read: இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து ஏமாற்றிய இளைஞர்.. இளம் பெண் பரபரப்பு புகார்!
இந்தசம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, குளிக்கச்சென்ற சகோதரிகள் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், அவர்களின் தந்தை அல்தாஃப் பாஷா சந்தேகமடைந்துள்ளனார். உடனடியாக பாத்ரூம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் மயங்கிய நிலையில், சுயநினைவின்றி கிடந்துள்ளனர். விரைந்து, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து, சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார் பாத்ரூமில் போதிய காற்றோட்டம் இல்லாததே உயிரிழப்பு ஏற்பட காரணம் என்று கூறினர். அதோடு, சகோதரிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, வாயு கசிந்தது மட்டுமே இறப்புக்கு காரணம் என்றும் தெரிவித்தனர்.