Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டிடிவி தினரகன் – ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு.. 20 நிமிடம் நடந்த மிட்டீங்.. என்ன மேட்டர்?

TTV Dhinakaran O Paneerselvam Meet : சென்னையில் நடந்த திருமண விழாவில் அமமு பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்துள்ளனர். இந்த விழாவிற்கு வந்த இருவரும் அருகருகே அமர்ந்து, நலம் விசாரித்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது இருவரும் 20 நிமிடங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

டிடிவி தினரகன் – ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு.. 20 நிமிடம் நடந்த மிட்டீங்.. என்ன மேட்டர்?
டிடிவி தினகரன் - ஓ.பன்னீர்செல்வம்
Umabarkavi K
Umabarkavi K | Published: 27 Sep 2025 06:20 AM IST

சென்னை, செப்டம்பர் 27 : அமமுக பொதுச் செயலலார் டிடிவி தினகரனும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்துள்ளனர். சென்னையில் நடைபெறும் விழாவில் டிடிவி தினரகன், ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்ந்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது 10 நிமிடங்களுக்கு மேலாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இதனால், அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால், அனைத்து கட்சிகளும் தங்களது பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. இதற்கிடையில், தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. கூட்டணி அமைந்ததில் இருந்தே, பாஜக மற்றும் அதிமுகவில் சலசலப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.

அதாவது, அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் எனவும் பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும் என சீனியர் அமைச்சர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். எடப்பாடி பழனிசாமி அதனை மேற்கொள்ளவில்லை என்றால், நானே அப்பணியை மேற்கொள்வதாகவும் கூறினார். இதனை அடுத்து, செங்கோட்டையனின் கட்சி பொறுப்பை எடப்பாடி பழனிசாமி பறித்தார். அதோடு, பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி மறுத்தே வருகிறார். இதுஒரு பக்கம் இருக்க, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விலகியுள்ளனர்.

Also Read : மக்கள் பிரதிநிதியை பிச்சைக்காரன் என இழிவுப்படுத்துவதா? ஊர்ந்து சென்று முதல்வரான இவரெல்லாம் பேசலாமா? – செல்வப்பெருந்தகை..

டிடிவி தினரகன் – ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

இதனால், பாஜக கடும் அதிருப்தி அடைந்தது. இதனால், பாஜகவில் இருவரையும் இணைக்க வேண்டும் என பாஜக மேலிடம் நயினார் நாகேந்திரனிடம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கின்றனர். இப்படியாக அதிமுகவில் சலசலப்புகள் இருந்து வரும் நிலையில், 2025 செப்டம்பர் 26ஆம் தேதியான நேற்று டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நடந்துள்ளது.

சென்னை நந்தனத்தில் நடந்த விஐடி விஸ்வநாதன் வீட்டு திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வமும் டிடிவி தினகரனும் சந்தித்து பேசியுள்ளனர். விழாவிற்கு வந்த இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து, நலம் விசாரித்து கொண்டனர். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அண்மையில் தான், டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்திருந்தார்.

Also Read : டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு.. ஒரு மணி நேரம் ஆலோசனை.. அதிமுகவில் பரபரப்பு!

சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் இல்லத்திற்கு சென்றே, அண்ணாலை சந்தித்தார். அப்போது, என்டிஏ கூட்டணியில் இணைவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், அண்ணாமலையின் கோரிக்கை டிடிவி தினகரன் நிராகரித்தார். என்டிஏ கூட்டணியின் முதல்வராக வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்றும் இதனால் கூட்டணி சேருவதற்காக மறுபரிசீலனை செய்ய தேவையில்லை எனவும் திட்டவட்டமாக கூறியிருந்தார். எனவே, டிடிவி தினகரன் மீண்டும் என்டிஏ கூட்டணி இணைய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.   அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் என்ன மாதிரியான முடிவை எடுப்பார் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.