Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

’இனி கூட்டணிக்கு வாய்ப்பில்லை’ டிடிவி தினகரன் திட்டவட்டம்!

TTV Dhinakaran On NDA Alliance : தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வராக வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை கூட்டணியில் இணைவது குறித்து மறுபரிசீலனை செய்ய தேவையில்லை என்று டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

’இனி கூட்டணிக்கு வாய்ப்பில்லை’  டிடிவி தினகரன் திட்டவட்டம்!
டிடிவி தினகரன்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 24 Sep 2025 16:45 PM IST

சென்னை, செப்டம்பர் 24 : எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை, பாஜக கூட்டணியில் இணைவது குறித்து மறுபரிசீலனை செய்வதற்கு அவசியம் இல்லை எனவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னு சில மாதங்களே உள்ளன. இதனால், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்புகள் இருந்து வருகிறது. அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என அதிமுகவில் உள்ள சீனியர் தவைலர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அதே நேரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினரகன், ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியுள்ளனர்.

இதனால், பாஜக தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் இணைக்க பாஜக மேலிடம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் இணைய வாய்பில்லை என்றே கூறப்படுகிறது. சமீபத்தில் கூட, முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரனை சந்தித்து, கூட்டணியில் இணைவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில், அண்ணாமலையின் கோரிக்கையை டிடிவி தினகரன் நிராகரித்துள்ளார்.

Also Read : கமலை அவமதிக்கும் பேச்சு.. கண்டுக்கொள்ளாத திமுக.. கடுப்பில் மநீம தொண்டர்கள்!

அண்ணாமலை  கோரிக்கையை நிராகரித்த டிடிவி தினகரன்

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன், ” அண்ணாமலை ஏற்கனவே என்னை சந்திப்பேன் என்று கூறியிருந்தார். அதன்படி, ஞாயிற்றுக் கிழமை மாலை என்னை அவர் சந்தித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என்று அண்ணாமலை என்னிடம் கோரிக்கை வைத்தார். அதை தாண்டி, நாங்கள் நண்பர்கள் என்ற முறையில் அரசியல் தாண்டி பல விஷயங்கள் பற்றி பேசினோம்.

எங்களை கூட்டணிக்கு அழைத்து வந்தது அண்ணாமலை தான். அண்ணாமலையின் முயற்சியில் தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தேன். எனவே, அந்த கூட்டணியில் இருந்து விலகியபோது, பலமுறை என்னிடம் அண்ணாமலை தொலைபேசியில் பேசினார். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வராக வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது. அதிமுகவில் பிரச்னை இல்லை. முதல்வர் வேட்பாளரை ஏற்க முடியாது.

Also Read : என்டிஏ கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன்? உள்ளே வந்த ரஜினி.. அண்ணாமலை பளீச்!

எனவே, அவர் முதல்வர் வேட்பாளராக இருக்கும் பட்சத்தில், கூட்டணியில் இணைவது குறித்து மறுபரிசீலனை செய்ய தேவையில்லை.  அதற்கு வாய்ப்பும் இல்லை. அதிமுகவை எடப்பாடி பழனிசாமி விலை கொடுத்து வாங்கியுள்ளார். இப்படி எங்களையும், எங்களது கட்சியையும் அழிக்க நினைக்கும் நபருடன் எப்படி கூட்டணிக்கு செல்ல முடியும். அரசியலில் நிரந்தர எதிரி இல்லை. ஆனால் துரோகம் வேறு. நயினார் நாகேந்திரன் மீது தனிப்பட்ட முறையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை” என்றார்.