Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

என்டிஏ கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன்? உள்ளே வந்த ரஜினி.. அண்ணாமலை பளீச்!

TTV Dhinakaran Annamalai Meet : அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. அதுகுறித்து தற்போது அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

என்டிஏ கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன்? உள்ளே வந்த ரஜினி.. அண்ணாமலை பளீச்!
அண்ணாமலை
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 23 Sep 2025 10:59 AM IST

 சென்னை, செப்டம்பர் 23 :  மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய டிடிவி தினகரனிடம் வலியுறுத்தியதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின் அரசியல் களம் குறித்து இருவரும் பேசினோம் என்றும் அண்ணாமைலை கூறியுள்ளார். 2026  சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும்  7 மாதங்களே உள்ளன. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  குறிப்பாக,  2025 ஏப்ரல் மாதம் அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. கூட்டணி அமைந்ததில்  அதிமுகவிலும், பாஜகவிலும்  சலசலப்புகள் இருந்து வருகிறது. இதில் அண்மையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விலகினார். இதனால், பாஜக தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதனால்,  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை பாஜக மேடலிடம் டெல்லிக்கு அழைத்து, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணிக்கு இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.  இதற்கு முன்னதாகவே,  முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிடிவி தினகரனை சந்திப்பேன் என கூறி இருந்தார்.  இந்த நிலையில் தான், 2025 செப்டம்பர் 24ஆம் தேதியான நேற்று சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்றே, அண்ணாமலை அவரை சந்தித்தார். இரண்டு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Also Read :  டிடிவி தினகரன் – அண்ணாமலை திடீர் சந்திப்பு.. பின்னணி என்ன?

‘டிடிவி தினகரன் நல்ல முடிவு எடுப்பார்’

குறிப்பாக, என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரனை இணைக்க அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், டிடிவி தினகரனுடனான சந்திப்பில் பேசியது குறித்து அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, ”அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை. டிடிவி தினகரன் போன்ற தலைவர்கள் 2024 தேர்தலில் நம்மை நம்பி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தார்கள்.

அவர்களை காயப்படுத்தும் வகையில் பொது வெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும். டிடிவி தினகரனை நேற்று முன்தினம் சந்தித்தேன்.  டிடிவி தினகரனை சந்தித்து மீண்டும் கூட்டணியில் இணைய வலியுறுத்தினேன். இது வெளிப்படையான சந்திப்பு. திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் ஒன்றுபடுமாறு, டிடிவி தினகரனிடம் கோரிக்கை விடுத்திருக்கிறேன். தமிழகத்தின் அரசியல் களம் குறித்து பேசினேன். கூட்டணியில் இணைவது குறித்து நவம்பர் மாதத்தில் முடிவு எடுப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

Also Read : எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் கூடுகிறது – அண்ணாமலை

ரஜினி குறித்து பேசிய அண்ணாமலை

எனக்கு நம்பிக்கை இருக்கு. டிசம்பர் மாதம் வரை காத்திருப்போம். அடிக்கடி சந்தித்து பேசும்போது நட்புறவு இருக்கும். டிடிவி தினகரன் நல்ல முடிவை எடுப்பார். அடுத்து ஓ.பன்னீர்செல்வம் அவர்களையும் சந்திப்பேன்” என்று கூறினார்.  ரஜினியை சந்தித்தது குறித்து அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ” ரஜினிகாந்த் என் குரு. மாதத்திற்கு ஒருமுறை நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசுவது வழக்கம். அவரை பலமுறை சந்தித்து யோகா போன்ற ஆன்மீக விஷயங்களை பேசுவோம். எனவே, அதை அரசியலோடு முடிச்சு போட்டு பேச வேண்டாம்” என்று அண்ணாமலை கூறினார்.