BJP Annamalai: காதல் திருமணம் செய்ய வேண்டுமா..? பாஜக அலுவலகம் வரலாம்.. அண்ணாமலை ஆதரவு!
Tamil Nadu Caste Violence: திருநெல்வேலியில் நிகழ்ந்த ஆணவக் கொலையைத் தொடர்ந்து, தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என அனைத்து கட்சித் தலைவர்களும் வலியுறுத்துகின்றனர். பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்து சமூகத்தில் சாதிப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது என தெரிவித்தார்.

திருநெல்வேலியில் கவின் என்ற ஐடி ஊழியர் ஆணவ படுகொலை (Tirunelveli Honour Killing) செய்யப்பட்டது முதலே சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களாக முத்தரசன், சண்முகம் உள்ளிட்டோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கையும் வைத்தனர். இந்தநிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் (BJP Annamalai) சாதி பிரச்சனை இந்து சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என்றும், சாதி ஆணவ கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ALSO READ: கவின் குடும்பத்தை நேரில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. உதவி செய்த திருமாவளவன்..!




காதலுக்கு ஆதரவு:
இன்றைய தினம், மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளியின் 2025 ஆண்டு விளையாட்டு தினத்தில் கலந்து கொண்டு மாணவர்களின் திறமைகளை கண்டு மகிழ்ந்தேன்.
இன்றைய சிறார்கள் நாளைய தேசத்தின் தலைவர்கள். திரு.ஆரியபட்டா, திரு. C.V.ராமன், திரு. ரபிந்த்ரநாத் தாகூர், திரு. சிவாஜி என ஒவ்வொரு… pic.twitter.com/gLK9LYAan3
— K.Annamalai (@annamalai_k) August 25, 2025
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “திருநெல்வேலி மாநாட்டில் சேர்கள் காலியாக இருந்ததாக சிலர் வீடியோக்களை பரப்புகின்றனர். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில், 99.5 சதவீதம் பூத் ஏஜெண்டுகள் கலந்துகொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இது தொண்டர்களுக்கான மாநாடு அல்ல, பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கானது.” என்றார்.
தொடர்ந்து, காதல் திருமணங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “பாரதிய ஜனதா கட்சியில் நாங்கள் அனைவரும் ஆணவ படுகொலை மீது கடும் கோபத்தில் உள்ளது. இந்த படுகொலைக்கு எதிராக கடுமையான சட்டத்தை கொண்டு வந்து, தவறு மேற்கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக அலுவலகத்திற்கு பல காதல் ஜோடிகள் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வருகிறார்கள்.
இந்து சமூகத்தில் சாதிப் பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நாம் அனைவரும் சமம் என்று குறிப்பிட்டாலும், சில பகுதிகளில் சாதிய மனநிலை இன்னும் அதிகமாகவே உள்ளது. பள்ளிகளில் இருந்தே இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி பாடத்திட்டத்தை சரி செய்ய வேண்டும். இதற்கு அரசுகள் முன்னுதாரணமாக திகழ வேண்டும், கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும்” என்றார்.
ALSO READ: ”விஜயின் பலம் என்ன? 50 வருஷமா எங்கே போனார்? ” – அண்ணாமலை சரமாரி கேள்வி..
மைனராக நினைக்க கூடாது:
தொடர்ந்து பேசிய அவர், “ ஆணவ கொலைகளில் ஈடுபடும் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். யாராவது ஒருவர் சாதி காரணமாக கொலை செய்தால், அவர் 18 வயதுக்கு குட்பட்டவராக இருந்தால் அவர்களை மைனராக கருதக்கூடாது. 16 வயது 17 வயதுடைய நபர்கள் சாதிக்காக கொலை செய்தால், அப்படிப்பட்டவர்களை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பாமல் உரிய தண்டனை வழங்க வேண்டும். திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டு, இன்றும் சாதி பிரச்சனை இருக்கிறது என்றால், அது தோற்றுவிட்டது என்றுதான் அர்த்தம்” என்றார்.