Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அண்ணாமலை குறித்து யாரும் பேச வேண்டாம் – நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்..

AIADMK District Secretaries Meeting: அதிமுக பொதுச்செயலாளர் கூட்டம் ஆகஸ்ட் 30, 2025 தேதியான இன்று சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை குறித்து யாரும் பேச வேண்டாம் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அண்ணாமலை குறித்து யாரும் பேச வேண்டாம் – நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்..
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Aug 2025 19:00 PM

சென்னை, ஆகஸ்ட் 30, 2025: பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குறித்து யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆளும் திமுக அரசு மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் முழு வீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2025 ஜூன் மாதம் “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதில் மாவட்டம் தோறும் சென்று, தொகுதி வாரியாக மக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். இதுவரை மூன்று கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வருகிற 2025 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நான்காம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்.

எடப்படி பழனிசாமியின் தேர்தல் சுற்றுப்பயணம்:

தற்போது வரை அவர் 118 சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்துள்ளார். வரும் 2025 செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கும் நான்காம் கட்ட தேர்தல் பிரச்சாரம், 2025 செப்டம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், அவ்வப்போது நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவது, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்துவது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:


அந்த வகையில், சென்னை ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவை தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமைக்கழக நிர்வாகிகளான கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

Also Read: ” தமிழருக்கு நடந்த துரோகம்.. நல்லாட்சி அமைய வேண்டும்” – மூப்பனார் நினைவு நாளில் நிர்மலா சீதாராமன் பேச்சு..

அண்ணாமலை குறித்து பேச வேண்டாம்:

இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சனம் செய்ய வேண்டாம் என நிர்வாகிகளுக்கு வலியுறுத்தினார். மேலும், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படுத்தும் தேவையற்ற விவாதங்களையும் பேச்சுக்களையும் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். “அண்ணாமலை நம்மைப் பற்றி எதுவும் பேசுவதில்லை; நீங்களும் அவரைப் பற்றி எதுவும் பேச வேண்டாம். கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படாது என பலர் வெளியில் காத்திருக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இன்னும் வேகப்படுத்துங்கள்,” என அவர் கூறினார்.

Also Read: இனி மழை இல்லை.. பொளக்கப்போகும் வெயில்.. மதுரையில் பதிவான 40 டிகிரி செல்சியஸ்..

களம் அதிமுகவிற்கு சாதகமாக உள்ளது:

மேலும், விஜய் பற்றி பேசிய எடப்பாடி பழனிசாமி, “புதிய கட்சி அவர்கள் வளர்ச்சிக்காக எதையாவது பேசுவார்கள்; அதை நாம் கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மூன்று சுற்று தேர்தல் பிரச்சாரம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. களம் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளதை நேரில் கண்டேன். இதுவரை சென்ற 118 தொகுதிகளில் நிச்சயம் 100 தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவோம்,” என தெரிவித்துள்ளார்.