Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Annamalai: பால் பண்ணை.. இயற்கை விவசாயம்.. எதிர்கால முயற்சிகள் குறித்து ஓபனாக பேசிய அண்ணாமலை!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தன்னைப் பற்றி பரவும் தவறான தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும், இயற்கை விவசாய முயற்சிகளுக்காகவும் சில விஷயங்களை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் விரைவில் பால் பண்ணை அமைக்க மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

Annamalai: பால் பண்ணை.. இயற்கை விவசாயம்.. எதிர்கால முயற்சிகள் குறித்து ஓபனாக பேசிய அண்ணாமலை!
அண்ணாமலை
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 12 Sep 2025 15:21 PM IST

தமிழ்நாடு, செப்டம்பர் 12: தன்னைப் பற்றி வெளியாகும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அரசியல் கட்சிகளின் களப்பணிகள் மிக தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் அதிமுக – பாஜக இணைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி இணைந்த நிலையில் 2024 தேர்தலில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தது. தற்போது மீண்டும் சட்டமன்ற தேர்தலில் இணைந்துள்ளது. கூட்டணி பிளவு ஏற்பட்டதற்கு அப்போது பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலையின் பேச்சு தான் காரணம் என தெரிவிக்கப்பட்டது. இப்படியான நிலையில் மீண்டும் கூட்டணி இணைந்தபோது தலைவர் பதவியில் அண்ணாமலைக்கு பதில் நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.

டெல்லி கூட்டத்தில் பங்கேற்காத அண்ணாமலை

இதனையடுத்து அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினராக பதவி வழங்கப்பட்டது. ஆனால் இதைவிட பவர்ஃபுல்லான பதவி வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் சில நாட்களுக்கு முன் டெல்லியில் தேசிய உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இதில் தமிழகத்தின் பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் தமிழக தேர்தல் களம் தொடங்கி தொகுதி பங்கீடு வரை பல்வேறு விஷயங்களும் ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்காதது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் என்றால் ஏற்கத்தக்கது அல்ல – விஜயின் பிரச்சாரம் குறித்து அண்ணாமலை கருத்து..

அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா இல்லையா என்ற கேள்வியும் எழுந்தது. இது தொடர்பாக பேசிய அண்ணாமலை, ‘வேலைப்பளு மற்றும் அதிகமான திருமண நிகழ்வுகள் இருந்ததால் கூட்டத்திற்கு செல்ல முடியவில்லை’ எனக் கூறினார். இது மேலும் பேசுபொருளாக மாறியது. ஒரு கட்சியின் நிகழ்வை விட தனிப்பட்ட நிகழ்வுக்கு யாராவது முக்கியத்துவம் கொடுப்பார்களா? என்ற கேள்வியும் இருந்தது. இப்படியான நிலையில் அண்ணாமலை இந்த கூட்டத்தை புறக்கணித்தார் என்று சொல்லப்பட்டு வருகிறது.

ஆர்வகோளாறுகளுக்கு பதில்


இப்படியான நிலையில் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்னுடைய அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு இயற்கை விவசாய நலனுக்காகவும், சமுதாய நலனுக்காகவும் நான் செய்துவரும் பணிகள் குறித்து சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். இது எனது கவனத்திற்கு வந்தது.  இயற்கை விவசாயத்தின் மீது நான் கொண்டுள்ள ஆர்வத்தையும் எங்களின் We the Leaders அறக்கட்டளை இயற்கை விவசாயம் தொடர்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதையும் பலர் அறிந்திருப்பீர்கள்.

அப்படியான நிலையில் கடந்த 2025 ஜூலை 12ஆம் தேதி ஒரு விவசாய நிலத்தை நான் வாங்கி இருப்பது உண்மைதான். என்னுடைய மற்றும் மனைவியின் சேமிப்பு கடன் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த நிலத்தை நான் வாங்கியிருக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக அந்த கடனுக்கான மாத வட்டியும் வங்கி கணக்கு மூலம் செலுத்தி வருகிறேன். நிலத்தை பதிவு செய்யும் நாளில் நான் செல்லவில்லை என கூறுபவர்கள் பவர் ஆப் அட்டர்னி மூலம் ஒரு அசையா சொத்தை வாங்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் மீண்டும் சேர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

அதன்படி ஜூலை 10ஆம் தேதி காலப்பட்டி பதிவாளர் அவர்கள் எனது மனைவி அகிலாவுக்கு எனது பவர் ஆஃப் அட்டர்னி வழங்கப்பட்டது இந்த நிலத்தை பதிவு செய்வது தொடர்பாக ரூபாய் 40.59 லட்சம் செலுத்தியுள்ளோம்.  மேலும் நான் மத்திய அரசின் PMEGP திட்டத்தின் கீழ் பால் பண்ணை அமைப்பதற்காக கடனுக்கு விண்ணப்பித்துள்ளேன் அந்த விண்ணப்பம் பரிசளிக்கப்பட்டு வருகிறது.

முதலீட்டு நிறுவனம்

அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கைகள் இவை அனைத்தையும் பிரதிபலிக்கும். மேலும் நமது இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவித்து உதவுவதன் மூலம் தங்கள் முதலீட்டு கணக்கு கனவுகளை நினைவாக்கும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உதவ விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவனத்தை தொடங்கவும் முடிவு செய்துள்ளேன். தமிழக பாஜக தலைவரானதிலிருந்து 2020 ஏப்ரல் மாதம் வரை என் குடும்பத்துடன் செலவிட எனக்கு குறைந்த நேரமே கிடைத்தது.

தற்போது எனது குடும்பத்திற்காகவும், குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் சட்டத்திற்கு உட்பட்டு சில வணிக முன்னெடுப்புகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இத்தனை ஆண்டுகளாக நான் எனது எல்லா செயல்களிலும் உண்மையையும் நேர்மையையும் கடைப்பிடித்து வருகிறேன். சில ஆர்வகோளாறுகள் வெட்டியாக நேரத்தை வீணடித்து பேசிக் கொண்டிருப்பதை விட்டு பயனுள்ளதாக நேரத்தை செலவிடுவார்கள் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.