பாஜகவில் மீண்டும் ஓபிஎஸ், டிடிவி? அண்ணாமலை சொன்ன கருத்து.. மாறுமா கூட்டணி கணக்கு?
Annamalai On NDA Alliance : தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், தனக்கு பாஜக தலைமை மீது அதிருப்தியில் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, செப்டம்பர் 05 : தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகிய இருவருமே தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வர் என நம்புகிறேன் என முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இருவருமே பெருந்தன்மைமிக்க அரசியல் வாதிகள் என்றும் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக நோன் பேசியுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்கிடையில், அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி அமைந்ததில் இருந்தே பல உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. அதிமுகவிலும், பாஜகவிலும் உட்கட்சி பூசல் இருந்து வருகிறது. இதனால், கூட்டணியில் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அதாவது, பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அதிமுகவில் உள்ள சீனியர் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அதே நேரத்தில், பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சிலர், கூட்டணியில் இருந்து விலக தொடங்கியுள்ளனர். அதிமுக பாஜக கூட்டணி அமைந்த ஐந்து மாதத்தில் இரண்டு தலைவர்கள் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகியுள்ளனர். அதாவது, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகியுள்ளனர். இதற்கிடையில், சமீபத்தில் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நடந்த பாஜக கூட்டத்தில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால், அண்ணாமலை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும் தகவல்கள் பரவின.
Also Read : மாறும் கூட்டணி கணக்கு? என்டிஏ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக… சுதீஷ் சொன்ன தகவல்!
பாஜக தலைமை மீது அதிருப்தி?
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை பேட்டி அளித்தார். அப்போது, பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசியுள்ளார். அவரிடம் பாஜக மீது அதிருப்தியா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “வேறு வேறு மனோபாவம், சித்தாந்தம் இருக்கக் கூடிய குழுக்கள் என்டிஏ கூட்டணியில் இருக்கிறது.
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே முதன்மை நோக்கமாக உள்ளது. அதனால், பிரச்னைகள் இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே சில பிரச்னைகள் உள்ளது. இந்த பிரச்னைகள் விரைவில் சரியாகும் என நம்பிக்கையாக இருக்கிறேன். நான் பாஜக தலைமை மீது அதிருப்தியில் இல்லை. தலைவராக இருந்தபோது தான் எங்களுக்கு நேரம் கொடுக்கவில்லை.
பாஜகவில் மீண்டும் ஓபிஎஸ், டிடிவி?
இப்போதாவது நேரம் கொடுங்கள் என தொண்டர்கள் கேட்கிறார்க்ள. அதனால், அவர்களுக்கு நேரம் ஒதுக்குகிறேன். ஆகவே, வேலைப்பளுவால் தான் என்னால் டெல்லி மீட்டிங்கிற்கு செல்ல முடியவில்லை. கட்சி தலைவர்களுக்கும், அமித் ஷா அவர்களுக்கும் முறையாக இதை தெரிவித்தேன். அவர்களும் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டார்கள். தலைவர்கள் களத்தில் இருப்பது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது” எனக் கூறினார்.
Also Read : அண்ணாமலையின் கையால் பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் மகன் – பரபரப்பு சம்பவம்
தொடர்ந்து, டிடிவி, ஓபிஎஸ் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பெருந்தன்மைமிக்க அரசியல்வாதிகள். அவர்கள் சாதாரண அரசியல் தலைவர்கள் இல்லை. அவர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. இருவரிடமும் நான் நெருக்கமாக பேசி இருக்கிறேன். சின்ன பிரச்னை உள்ளன. இல்லையென சொல்லவில்லை. அவை களையப்படும் என நம்புகிறேன். இருவருமே தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறேன்” என்றார்.