என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய தினகரன்.. ரிப்ளை கொடுத்த செங்கோட்டையன்.. அடுத்து என்ன?
Sengottaiyan On TTV Dhinakaran : என்டிஏ கூட்டணியில் இருந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விலகியது குறித்து செங்கோட்டையன் பதில் கொடுத்துள்ளார். டிடிவி தினகரன் கூறியது அவரது கருத்து என்றும் அதற்கு என்னால் பதில் கூடி முடியாது என்வும் அவர் கூறியுள்ளார்.

சென்னை, செப்டம்பர் 04 : தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக பொதுச் செயலார் டிடிவி தினகரன் விலகியது குறித்து செங்கோட்டையன் பதில் கொடுத்துள்ளார். எதுவாக இருந்தாலும் நாளை (செப்டம்பர் 5) பதில் அளிப்பேன் எனவும் அவருடைய கருத்திற்கு நான் பதில் கூற முடியாது எனவும் செங்கோட்டையன் பதில் கொடுத்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுகவில் நடக்கும் அதிரடி திருப்பங்கள் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். தேர்தலுக்கு ஓராண்டு முன்பே, அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது. கூட்டணி அமைத்ததில் இருந்தே, அதிமுகவில் சலசலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்தது, அதிமுகவில் சீனியர் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.




குறிப்பாக, செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இதற்கிடையில், 2025 செப்டம்பர் 5ஆம் தேதி மனம் திறந்து பேசுவதாக செங்கோட்டையன் கூறியிருக்கிறார். ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து விலகுவாரா அல்லது தனி அணியை உருவாக்குவாரா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது. இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகியுள்ளார்.
Also Read : டெல்லியில் பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.. விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள்..
”அதற்கு என்னால் பதில் கூற முடியாது”
ஒருபக்கம் என்டிஏ கூட்டணியை பலமாக்க அமித் ஷா டெல்லியில் பாஜக தலைவர்களை அழைத்து மீட்டிங் நடத்தி வரும் நிலையில், டிடிவி தினகரன் இந்த முடிவை எடுத்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்த ஐந்து மாதத்திலேயே 2 கட்சிகள் வெளியேறியுள்ளது. அண்மையில் தான் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில், டிடிவி தினரகன் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகியது குறித்தும், அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வாய்ப்பில்லை என்பதால் கூட்டணியை விட்டு வெளியேறியதாக தினகரன் கூறியது குறித்தும் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “அது அவருடைய கருத்து. அதற்கு நான் பதில் கூற முடியாது. அவர் மனதில் என்ன நினைத்து அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணையை வாய்ப்பில்லை எனக் கூறினார் என்பது தெரியாது. முன்னாள் அமைச்சர்கள் யாராவது தொடர்பு கொண்டு பேசினார்களா என்பது குறித்த அனைத்து கேள்விகளுக்கும் நாளை பதில் அளிக்கிறேன்” என கூறினார்.
Also Read : சசிகலாவை சந்திக்க நேரம் கேட்ட ஓ. பன்னீர்செல்வம் ? அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் தீவிரம்..
ஓபிஎஸ், சசிகலா, தினகரன், செங்கோட்டையன் புதிய அணி?
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக பல்வேறு அணிகளாக உடைந்தது. எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என 4 அணிகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால், 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வர முயற்சியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகிய முயன்று வருகின்றனர். இதற்கிடையில், பல மாதங்களாக அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன் என்ன முடிவை எடுப்பார் என்பது தெரியவில்லை. ஒருவேளை, அதிமுகவில் இருந்து வெளியேறி தனி அணி அமைத்து பரிந்து சென்றவர்களுடன் இணைந்து செயல்படும் என்பது செங்கோட்டையனின் நிலைப்பாடாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு ஒரு முடிவை செங்கோட்டையன் எடுத்தால், கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும் என திமுக தொண்டர்கள் கருதுகின்றனர்.