Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

TTV Dhinakaran: கூட்டணி மாறும் முடிவில் டிடிவி தினகரன்.. அப்ப அந்த கட்சி தானா?

2026 Assembly elections: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை டிசம்பர் 2025-ல் அறிவிப்பதாக அறிவித்துள்ளார். இதுவரை பாஜக கூட்டணியில் இருந்து வந்த அவர், புதிய கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TTV Dhinakaran: கூட்டணி மாறும் முடிவில் டிடிவி தினகரன்.. அப்ப அந்த கட்சி தானா?
டிடிவி தினகரன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 02 Sep 2025 07:26 AM

தென்காசி, செப்டம்பர் 2: யாருடன் கூட்டணி என்பது குறித்து 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவிப்போம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுவரை அவர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருந்து வருவதாக கூறி வந்தார். இதனை பாஜக தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் உறுதி செய்தார். இப்படியான நிலையில் தென்காசி மாவட்டத்தில் சிவகிரி அருகே உள்ள நெற்கெட்டும்செவலில் மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கூட்டணியில் வரும் மாற்றம்?

அப்போது பேசிய டிடிவி தினகரன், “அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பலத்தை வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அறிவிப்போம். ஒவ்வொரு தொகுதியாக சென்று தற்போது கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். மேலும் வரும் டிசம்பர் மாதம் கூட்டணி பற்றி அறிவிப்போம். அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது தெரியும். நிச்சயமாக தொண்டர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்.

Also Read:TTV Dhinakaran: திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம்.. கூட்டணி குறித்து பேசிய டிடிவி தினகரன்!

அதே சமயம் 2024 மக்களவைத் தேர்தலின் போது இந்திய நாட்டின் பிரதமராக முடி வர வேண்டும் என அமமுக நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது. மேலும் கூட்டணி குறித்து நான் எந்தவித தன்னிச்சையான முடிவையும் எடுக்க முடியாது. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோரின் கருத்தை அடிப்படையாக தான் முடிவு எடுக்க முடியும். அதேசமயம் மக்களவைத் தேர்தல் என்பது வேறு, சட்டமன்ற தேர்தல் என்பது வேறு எனவும் டிடிவி தினகரன் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியா?

டிடிவி தினகரனின் எந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பேச பொருளாக மாறி உள்ளது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அவர் விலகுகிறாரா என கேள்வி எழுந்துள்ளது.  மேலும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி பற்றி அறிவிப்போம் என தெரிவித்துள்ளதால் அவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பார் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஏற்கனவே தேமுதிக, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆகியவையும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்று கருத்து நிலவி வருகிறது.

Also Read: கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்… உறுதியாக சொன்ன நயினார் நாகேந்திரன்.. நீடிக்கும் குழப்பம்!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி பறிபோனதற்கு காரணம் டிடிவி தினகரனின் அமமுக பெற்ற கணிசமான வாக்குகளும் ஒரு காரணமாக அமைந்தது. அப்படியான மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி அமைந்த பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் புறக்கணிக்கப்படுவதாக டிடிவி தினகரன் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. அதனால் தான் தான் கூட்டணியில் இருப்பது பற்றி நயினார் நாகேந்திரனிடம் கேட்க வேண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.