கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்… உறுதியாக சொன்ன நயினார் நாகேந்திரன்.. நீடிக்கும் குழப்பம்!
AIADMK BJP Alliance : அண்மையில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்த நிலையில், கூட்டணிக்குள் குழப்பங்கள் நீடித்து வருகிறது. இப்படியான சூழலில், டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் ஒரே மேடையில் ஏறுவோம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 13 : ஓ.பன்னீர்செல்வம் கூட்டணிக்குள் (BJP Alliance) வந்தால் சந்தோஷம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) தெரிவித்துள்ளார். எங்கள் கூட்டணியில் தான் டிடிவி தினகரன் (TTV Dhinakaran) எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார் என்றும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் ஒரே மேடையில் ஏறுவோம் என கூறியுள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு ஓராண்டு இருக்கு முன்பே, அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. கூட்டணி அமைத்ததில் குழப்பங்கள் நீடித்து வருகிறது. பாஜக தலைவர்களோ கூட்டணி ஆட்சி தான் என கூறி வரும் நிலையில், அதிமுகவோ தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சி அமைப்போம் என கூறி வருகின்றனர். இதனால், முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் குழப்பம் நீடித்து வருகிறது.
இதற்கிடையில், பாஜக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விலகினார். இதனால், கூட்டணிக்குள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை இழுக்க பாஜக முயற்சித்து வருகிறது. ஆனால், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் கூட்டணிக்குள் வரவே கூடாது என உறுதியாக உள்ளார். டிடிவி தினகரன் தங்கள் கூட்டணியில் இருப்பதாக கூறி வந்தாலும், அதற்கு எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசாமல் இருந்து வருகிறார். ஆனால், டிடிவி தினகரன் பெயரை கூட எந்த இடத்திலும் குறிப்பிடாமல் இருக்கிறது.




Also Read : நான் மெசேஜ் அனுப்பவில்லையா? ஆதாரத்தை காண்பித்த ஓபிஎஸ்.. நயினார் நாகேந்திரனுக்கு பதில்
ஓபிஎஸ், டிடிவி தினகரன் குறித்து பேசிய நயினார்
இதன் மூலம், டிடிவி தினகரன் கூட்டணி இருப்பதை அவர் விரும்பவில்லை என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்படியே கூட்டணிக்கு வெவ்வேறு கருத்துகள் இருக்கின்றன. இதனால், அதிமுக பாஜக இடையே தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. இதுபோன்ற சூழலில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேசியது கூட்டணிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் சேருவாரா என்று நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், “ஓ.பன்னீர்செல்வம் கூட்டணிக்குள் வந்தால் சந்தோஷம் தான்” எனக் கூறினார். தொடர்ந்து, ஒரே மேடையில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், “டிடிவி தினகரனிடம் நான் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன்.
Also Read : எம்.ஜி.ஆர் பயன்படுத்திய கார் எண்.. நயினார் நாகேந்திரனுக்கு ரெடியான பிரச்சார வாகனம்..
அவரும் பேசி கொண்டு இருக்கிறார். டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியில் தான் இருப்பார். தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கும். வெகு விரையில் கட்சி தலைவர்கள் எல்லாரும் ஒரே மேடையில் ஏறுவோம்” என கூறினார். தொடர்ந்து, பரபரப்புரையில் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரை சொல்லாமல் தவிர்ப்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நயினார், “முறையான சில ஏற்பாடுகள் முடிந்தபிறகு அனைவரின் பெயர்களையும் சொல்வார்” என கூறினார்.