‘தனிப் பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சி தான்’ டிடிவி தினகரன் பேட்டி!
TTV Dhinakaran On AIADMK BJP Alliance : அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பங்கள் நீடித்து வருகிறது. பாஜக தலைவர்கள் கூட்டணி ஆட்சி என்றும் அதிமுகவினர் அதற்கு மறுத்தும் வருகின்றனர். இந்த சூழலில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இருக்கும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
திருச்சி, ஜூலை 23 : திருச்சி மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பாஜக கூட்டணி அதிரடி கருத்துகளை தெரிவித்துள்ளது. அதாவது, 2026 தமிழ சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மை பெற்றாலும், கூட்டணி ஆட்சி தான் நடக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தான் கேட்க வேண்டும் எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
Published on: Jul 23, 2025 09:25 PM
Latest Videos