Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

TTV Dhinakaran: திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம்.. கூட்டணி குறித்து பேசிய டிடிவி தினகரன்!

2026 Tamil Nadu Elections: 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திமுகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளுக்கு கூட்டணி அழைப்பு விடுத்துள்ளார். திமுகவின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வலிமையை குறிப்பிட்டு, அவர்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் மக்களாட்சியை நிலைநாட்ட முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

TTV Dhinakaran: திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம்.. கூட்டணி குறித்து பேசிய டிடிவி தினகரன்!
டிடிவி தினகரன்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Jul 2025 09:39 AM

விழுப்புரம், ஜூலை 14: வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் (2026 Tamil Nadu Assembly Election) நடைபெற இன்னும் பல மாதங்கள் இருந்தாலும், இப்போதே அதன் எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று ஆட்சியை அமைக்க வேண்டும் திமுக-அதிமுக கட்சிகள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. அதேநேரத்தில் பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் (Tamilaga Vettri Kazhagam) தனித்து போட்டியிடும் என தெரிகிறது. திமுக கூட்டணியில் விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில், பாஜகவுடன் அதிமுக, அமமுக, ஓபிஸ் அணி கூட்டணியில் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தை வீழ்த்த விரும்பும் கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் (T. T. V. Dhinakaran) அழைப்பு விடுத்துள்ளார்.

ALSO READ: ‘டெபாசிட் இழக்கும்’ அதிமுக பாஜக கூட்டணி குறித்து விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

கூட்டணிக்கு அழைப்பு விடுத்த டிடிவி தினகரன்:


விழுப்புரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “திராவிட முன்னேற்ற கழகத்தை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை அடிப்படையாக கொண்டு, தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை நிறைவேற்றும் விதமாக தேசிய ஜனநாயக கூட்டணியை உள்துறை அமைச்சர் அமித்ஷா வலுப்படுத்தி வருகிறார். இந்த முயற்சிக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாக கருத்து சொல்வது நாகரிகமற்றது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து பயப்படுகிறது. எங்கள் கூட்டணி நிச்சயமாக திமுகவை தேர்தலில் வீழ்த்தி தமிழ்நாட்டில் மக்களாட்சியை கொடுக்கும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி போன்று சட்டம் ஒழுங்கு சரியாகும் பராமரிக்கும் ஆட்சியை, கூலிப்படைகள் இல்லாத ஆட்சியை, கொலை கொள்ளை இல்லாத ஆட்சியை, காவல்துறை மக்களின் நண்பர்களான செயல்படுகின்ற ஆட்சியை உறுதியாக கொடுப்போம்” என்றார்.

ALSO READ: தைலாபுரம் ராமதாஸ் வீட்டில் துப்பறியும் குழுவினர் சோதனை.. அறிக்கைக்கு பின் நடவடிக்கை என தகவல்..

கூட்டணியில் அமமுக இருக்கிறதா..?

தொடர்ந்து பேசிய அவர், “தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இருக்கிறதா இல்லையா என்பதை தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை கேட்டால்தான் தெரியும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகளை வரவேற்று திமுகவை வீழ்த்துவோம். நல்லதொரு ஆட்சி வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதனை நிச்சயமாக உருவாக்குவோம், அதனால் எங்கள் கூட்டணி இன்னும் பலம் பெறும். எங்கள் கூட்டணி ஒன்றுகூடி செயல்பட்டு திமுக என்னும் தீய சக்தியை வீழ்த்தும். திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரலாம். திமுக ஆட்சியில் இருக்கும் கொஞ்ச நாளைக்காவது சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வேலை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.