Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘டெபாசிட் இழக்கும்’ அதிமுக பாஜக கூட்டணி குறித்து விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin On AIADMK BJP Alliance : அதிமுக பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் டெபாசிட் இழக்கும் என துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக அடிமை மாடல் அரசு என்றும் பாஜக பாசிச மாடல் அரசு என்றும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார்.

‘டெபாசிட் இழக்கும்’ அதிமுக பாஜக கூட்டணி குறித்து விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 13 Jul 2025 19:16 PM

திருவண்ணாமலை, ஜூலை 13 : பாஜக அரசு பாசிச மாடல் அரசு என்றும் அதிமுக அடிமை மாடல் அரசு என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin)  காட்டமாக விமர்சித்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணி (AIADMK BJP Alliance) அமைத்திருக்கும் நிலையில், துணை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும், 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமு பாஜக கூட்டணி டெபாசிட் இழக்கும் என்றும் தமிழக மக்கள் ஓரணியில் நின்று பாசிசத்தை விரட்டுவார்கள் என்றும் உதயநிதி விமர்சித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக வடக்கு பயிற்சி பாசறைக் கூட்டம் 2025 ஜூலை 13ஆம் தேதியான இன்று நடைபெற்றது. இந்த கூட்டணி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அதிமுக பாஜக கூட்டணியை விமர்சித்து இருந்தார். அவர் பேசுகையில், “ஓரணியில் திமுக என்ற திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறார்.  நாங்கள் தமிழக மக்களின் வீடுகளின் கதவுகளை உரிமையோடு தட்டுகிறோம்.

உங்களை மாறி நாங்கள் அமித் ஷாவின் வீட்டு கதவையோ, கமலாலயம் வீட்டு கதவையோ தட்டவில்லை.  மக்களுக்கு  நான்கு வருடத்தில் பல பணிகளை செய்து கொடுத்து இருக்கிறோம்.  அந்த உரிமையில்  மக்களின் வீட்டின் கதவுகளை தட்டுகிறோம்.  அதிமுக  பாஜக கூட்டணியிலேயே ஒற்றுமை இல்லை. தமிழகத்தில் கூட்டணி அரசு தான் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்படி இல்லை என கூறுகிறார். இதனால், கூட்டணியிலேய கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் பேச்சு


இப்படி இருவரும் போட்டி போட்டு கொண்டிருந்தால், ஒரு தொகுதியில் கூட அதிமுக பாஜக கூட்டணி டெபாசிட் கூட வாங்க முடியாது.  அண்ணா பெயரில் தொடங்கிய அதிமுக என்று கட்சியை, பாஜகவிட அடமானம் வைத்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் போது வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையுடன் தொடங்கினார். ஆனால், தற்போது காவியமாக காட்சியளிக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் நின்று அடிமைகளையும், பாசிஸ்ட்களையும் வீழ்த்தபோவது உறுதி” என தெரிவித்தார்.