Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிமுகவின் தேர்தல் வியூகம்.. 2ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை அறிவித்த இபிஎஸ்.. முழு விவரம்!

Edappadi Palanisamy State Wide Tour : அதிமுக பொதுச் செயலளார் எடப்பாடி பழனிசாமி தனது இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தை அறிவித்துள்ளார். அதன்படி, இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தை 2025 ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.

அதிமுகவின் தேர்தல் வியூகம்.. 2ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை அறிவித்த இபிஎஸ்.. முழு விவரம்!
எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம்Image Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 13 Jul 2025 15:58 PM

சென்னை, ஜூலை 13 : அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) தனது இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தை அறிவித்துள்ளார். அதன்படி, தனது இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி 2025 ஜூலை 24ஆம் தேதி தொடங்க உள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு (Tamil Nadu Assembly Election) இன்னும் 9 மாதங்களே உள்ளது. இதனால்,  தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.  அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.  கூட்டணி பேச்சுகளும் அடிபட்டு வருகிறது.  திமுகவை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்ற அதிமுக வியூகம் அமைத்து வருகிறது. அதே நேரத்தில், திமுகவும் ஆட்சி தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது. எனவே, இரு கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதி வாரியாக தினமும் மீட்டிங் நடத்தி வருகிறார்.

அதே நேரத்தில், அதிமுக பொதுச் செயலளார் எடப்பாடி பழனிசாமி, ‘ மக்கள் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்ட சுற்றுப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். தனது முதற்கட்ட சுற்றுப் பயணத்தை 2025 ஜூலை 7ஆம் தேதி கோவை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். தற்போது, அவர் திண்டிவனத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். முதற்கட்ட சுற்றுப் பயணம் 2025 ஜூலை 21ஆம் தேதி நிறைவு செய்கிறார். இந்த நிலையில், தனது இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Also Read : அதிமுக வென்றால் கூட்டணி ஆட்சியா? ஒரே வார்த்தையில் திட்டவட்டமாக சொன்ன அமித் ஷா

2ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை அறிவித்த இபிஎஸ்


அதன்படி, இரண்டாம் கட்டமாக 2025 ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அதில், 2025 ஜூலை 24,25ஆம் தேதிகளி புதுக்கோட்டையிலும், 2025 ஜூலை 26ஆம் தேதி காரைக்கு, திருப்பத்தூர், சிவகங்கையிலும், 2025 ஜூலை 30ஆம் தேதி மானாமதுரை, ராமநாதபுரத்திலும், 2025 ஜூலை 31ஆம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கிலும், 2025 ஆகஸ்ட் 1,2ஆம் தேதிகளில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு பகுதிகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

Also Read : ‘பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்’ அமித் ஷா பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

தொடர்ந்து, 2025 ஜூலை 2 முதல் 5ஆம் தேதி வரை திருநெல்வேலியிலும், 2025 ஆகஸ்ட் 5,6ஆம் தேதிகளில் தென்காசியிலும், 2025 ஆகஸ்ட் 7,8ஆம் தேதிகளில் விருதுநகர் மேற்கு, கிழக்கு பகுதிகளில் தனது இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி நிறைவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.