Edappadi Palaniswami: நடைப்பயிற்சியில் எளிமையாக எலுமிச்சை வாங்கிய எடப்பாடி பழனிசாமி.. வியாபாரிகளிடம் நலம் விசாரிப்பு!
Edappadi Palaniswami Street Vendor Interaction: கோவை பயணத்தின்போது, எடப்பாடி பழனிசாமி தெரு வியாபாரியிடம் பழம் வாங்கி அவர்களுடன் கலந்துரையாடினார். ரேஸ்கோர்ஸ் பாதையில் நடைபயிற்சி மேற்கொண்ட அவர், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் டீ அருந்தினார். "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" பிரச்சாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அவர் கோவையின் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைத்தார்.

கோவை, ஜூலை 8: கோவையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி (Edappadi K. Palaniswami) சாலையோர வியாபாரியிடம் ரூ. 100 கொடுத்து 20 எலுமிச்சம் பழங்களை வாங்கினார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் டீ குடித்த எடப்பாடி பழனிச்சாமி, தனது ’மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ (Let’s Protect the People, Let’s Save TN) என்ற சுற்றுப்பயணம் குறித்து கலந்துரையாடி விவரங்களை கேட்டறிந்தார். எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்பி வேலுமணி மற்றும் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் ஆகியோர் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
கோவையை அடுத்த மேட்டுபாளையத்தில் நேற்று அதாவது 2025 ஜூலை 7ம் தேதி புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் தனது முதல் நாள் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, 2011 முதல் 2021 வரையிலான பத்தாண்டு கால அதிமுக ஆட்சிக் காலத்தில் கோயம்புத்தூரின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை எடுத்துரைத்தார். தொடர்ந்து, கோவை மற்றும் மேற்குப் பகுதியில் தொழில்துறை சூழலைப் புத்துயிர் பெற மேலும் பல திட்டங்களை உறுதியளித்தார். இந்த சுற்றுப்பயணத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி இரவு தாஜ் விவாண்டா ஹோட்டலில் தங்கினார்.




கோவையில் வியாபாரிகளிடம் கலந்துரையாடல்:
Edappadiyar’s simplicity and empathy towards the struggles of coolie workers and farmers are truly admirable ❤️🌱✌️ #AIADMK #EdappadiPalaniswami #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் pic.twitter.com/Ye18NMnuVT
— Harish M (@chnmharish) July 8, 2025
இதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி இன்று அதாவது 2025 ஜூலை 8ம் தேதி நடைப்பயிற்சியின் போது பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடையே அதிமுக ஆட்சிக்காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்கா புனரமைக்கப்பட்டு உங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தோம் என்றும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு கோவைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வரவோம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, சாலையோர வியாபாரியிடம் ரூ. 100 கொடுத்து 20 எலுமிச்சம் பழங்களை வாங்கியது மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கை குறித்து கேட்டறிந்தார். அதன்பிறகு, அதே பகுதியில் சாலையோர வியாபாரிகள் விற்பனை செய்து வந்த நிலக்கடலை, மக்காச்சோளம், கொத்தமல்லி, புதினா போன்றவை பற்றி மார்க்கெட்டில் எவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறீர்கள்..? எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்கிறீர்கள்..? விற்பனை நன்றாக செல்கிறீர்கள் போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டறிந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
தொடர்ந்து, அப்பகுதியில் மிகவும் பிரபலமான வேலன் காபி கடையில் அதிமுக நிர்வாகிகளுடன் நடை பயிற்சி முடித்து கொண்டு, டீ அருந்தி மகிழ்ந்தார். அப்போது, அங்கு வந்த பொதுமக்களிடமும் அதிமுகவின் சுற்றுப்பயணம் குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களிடம் உரையாடிய சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள தாஜ் விவாண்டா ஹோட்டலுக்குத் திரும்பினார்.
இதன் தொடர்ச்சியாக,தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாம் நாளான இன்று அதாவது 2025 ஜூலை 8ம் தேதி மாலை நேரங்களில் வடவள்ளி, சாய்பாபா காலனி மற்றும் நகரத்தின் முக்கிய இடங்களில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.