Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!

Kasthuri Joins BJP : நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்து உள்ளார். இவருடன் திருநங்கையான நமிதா மாரிமுத்துவும் பாஜகவில் இணைந்துள்ளதாக தெரிகிறது.

நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!
நடிகை கஸ்தூரி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 15 Aug 2025 15:11 PM

சென்னை, ஆகஸ்ட் 15 : நடிகை கஸ்தூரி பாஜகவில் (Actress Kasthuri) இணைந்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனை (Nainar Nagendran) முன்னிலையில் நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்துள்ளார். இவருடன் திருநங்கையான நமிதா மாரிமுத்துவும் பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பாஜகவில் கஸ்தூரி இணைவதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்த நிலையில் தற்போது அது உறுதியாக இருக்கிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் எட்டு மாத காலமே இருக்கிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், அண்மையில் தான் அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. கூட்டணி அமைந்ததில் இருந்து சலசலப்புகள் இருந்து வந்தாலும், பாஜக உட்கட்சியை பலப்படுத்த மும்முரம் காட்டி வருகிறது.

சமீபத்தில் கூட தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புதிய நிர்வாகிகளை நியமித்திருந்தார். தமிழக பாஜக துணை தலைவராக குஷ்பு நியமிக்கப்பட்டிருந்தார். அதே நேரத்தில் சரத்குமார், மீனாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு கொடுக்காமல் இருந்தது அவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.  இப்படியான சூழலில், தமிழக பாஜகவில் நடிகை கஸ்தூரி இணைந்துள்ளார்.

Also Read : பி.எல். சந்தோஷ் தலைமையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம்.. கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை..

பாஜகவுக்கு ஆதரவாகவே கஸ்தூரி பேசி வருகிறார். இந்து மக்கள் கட்சியுடன் அவர் செயல்படுவது, இந்து மதத்திற்கு எதிராக செயல்படும் கட்சிகளை விமர்சிப்பது போன்றே ஈடுபட்டு வருகிறார். மேலும், சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் கூட, தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு கூட கஸ்தூரி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில், தற்போது நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்துள்ளார். 

Also Read : பாஜக கூட்டணியில் தவெக இணையுமா? பி.எல். சந்தோஷ் சொன்ன விஷயம்.. நிர்வாகிகளுக்கு அட்வைஸ்!

பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி


இதுகுறித்து எக்ஸ் தளத்தில் நயினார் நாகேந்திரன் கூறுகையில், ”நடிகை திருமதி.கஸ்தூரி அவர்களும், நடிகையும், சமூக செயற்பாட்டாளரும், Namis South Queen India நிறுவனத்தின் தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்து அவர்களும் இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் சிவா அவர்களின் முன்னிலையில், பாஜகவில் இன்று இணைந்தனர்.

சமூக செயல்பாட்டாளரான திருமதி.கஸ்தூரி அவர்களும் நமீதா மாரிமுத்து அவர்களும் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களுடைய அரசியல் பயணம் பாஜகவில் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்தார்.