‘எனக்கு தேசிய அளவில் பொறுப்பு கிடைக்கும்’ விஜயதரணி சொன்ன விஷயம்!
Congress Former MLA Vijayadharani : தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி கருத்து தெரிவித்துள்ளது. அதாவது, தற்போது வெளியானது மாநில பட்டியல் என்றும், தனக்கு தேசிய அளவில் பொறுப்பு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தவெகவுடன் இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை 31 : தமிழக பாஜகவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், அதில், முன்னாள் எம்எல்ஏ விஜயதரணிக்கு (Congress Former MLA Vijaydharani) எந்த பொறுப்பு வழங்கப்படவில்லை. தனக்கு மாநில அளவில் பொறுப்பு வழங்கப்படும் என விஜயதாரணி எதிர்பார்த்து இருந்தார். ஆனால், அவருக்கு எதுவும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், அதுகுறித்து விஜயதரணி பேசியுள்ளார். அதாவது, பாஜகவில் தனக்கு தேசிய அளவில் பொறுப்பு கிடைக்கும் என விஜயதரணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவில் புதிய நிர்வாகிகளை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்து அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, தமிழக பாஜகவின் துணைத் தலைவர்களாக 14 பேரும், பொதுச் செயலாளர்களாக 5 பேரும், மாநில செயலாளர்களாக 15 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில், 2021ஆம் ஆண்டு பாஜக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிய கேடி ராகவனுக்கு மீண்டும் மாநில பிரிவு அமைப்பாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மாநில பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என மீனா, சரத்குமார், விஜயதாரணி ஆகியோர் காத்திருந்தனர். ஆனால், இவர்கள் மூன்று பேருக்கும் எந்த பதவியும் வழங்கப்படவில்லை. அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில் பலம் வாய்ந்த ஒருவராக வலம் வந்த விஜயதாரணிக்கு பதவி வழங்கவில்லை.
Also Read : ’கூட்டணி ஆட்சி தான்.. அமைச்சரவையிலும் பங்கு’ டிடிவி தினகரன் திட்டவட்டம்!




விஜயதரணி நம்பிக்கை
இதனால், அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த விஜயதரணி, ” பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியல் தான் தற்போது வெளியாகி உள்ளது. தேசிய அளவிலான பட்டியல் வெளியாகும். அதில், தனது பெயர் இடம்பெறும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதோடு, பாஜக துணை தலைவராக நியமிக்கப்பட்ட குஷ்புக்கு விஜயதரணி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்துக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு விஜயதரணி மறுப்பு தெரிவித்துள்ளது. தனக்கு தவெக கட்சிக்கு செல்லும் எண்ணம் எதுவும் இல்லை எனவும் கூறினார்.
காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக விஜயதரணி இருந்தார். குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு தொகுதியில் இருந்து மூன்று முறை வெற்றி பெற்றார். மேலும், காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவிகளையும் விஜயதரணி வகித்தார். அதாவது, மகளிர் அணி பொதுச் செயலாளர், கர்நாடக மாநில பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.
Also Read : பாஜக யாரையும் ஏமாற்றும் கட்சி அல்ல, ஏமாறும் கட்சியும் அல்ல – அண்ணாமலை..
தனக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் தொடர்ந்து முறையிட்டு வந்திருக்கிறார். ஆனால், தனக்கு வழங்காததால் அதிருப்தி அடைந்த விஜயதரணி, காங்கிரஸில் இருந்து விலகி, 2024ஆம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். ஆனால், பாஜகவிலும் அவருக்கு பெரிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.