Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குஷ்புவுக்கு புதிய பொறுப்பு.. தமிழக பாஜகவில் நிர்வாகிகள் நியமனம்.. அதிரடி அறிவிப்பு

Tamil Nadu BJP Vice President Kushboo : தமிழக பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு, சசிகலா புஷ்பா, பால் கனகராஜ் உள்ளிட்டோரும் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

குஷ்புவுக்கு புதிய பொறுப்பு..  தமிழக பாஜகவில் நிர்வாகிகள் நியமனம்.. அதிரடி அறிவிப்பு
பாஜக மாநில துணை தலைவரான குஷ்பு
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 30 Jul 2025 18:41 PM

சென்னை, ஜூலை 30 : தமிழக பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு (Kushboo) நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு, சசிகலா புஷ்பா, பால் கனகராஜ் உள்ளிட்டோரும் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. இன்னும் தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ளது. அண்மையில் தான், பாஜக அதிமுக கூட்டணி அமைத்தது.  தேர்தல் நெருங்கி வருவதால், ஒவ்வொரு கட்சிகளும் கட்சியை பலப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பாஜக தேர்தலில் வெற்றி பெற அனைத்து   நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கட்சியை பலப்படுத்தி வருகிறது. இந்த சூழலில் தான்,  தமிழக பாஜகவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில துணைத் தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள், மாநில பொருளாளர், இணை பொருளாளர், அலுவலக செயலாளர், மாநில சமூக ஊடக அமைப்பாளர், தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர், மாநில தலைமை செய்தி தொடர்பாளர், ஊடக அமைப்பாளர் பதவுக்கு நிர்வாகிகளை மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் குறிப்பாக, தமிழக பாஜகவில் குஷ்புவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Also Read : ‘பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்’ அமித் ஷா பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

தமிழக பாஜகவில் நிர்வாகிகள் நியமனம்

அதாவது, பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், விபி துரைசாமி, கேபி ராமலிங்கம், கரு நாகராஜன், சசிகலா புஷ்பா, பால் கனகராஜ் வெங்கடேசன், கோபால்சாமி, சுந்தர், சம்பத் உள்ளிட்ட 14 பேர் பாஜக துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, பொதுச் செயலாளர்களாக கேசவ விநாயகம், பொன்.வி. பாலகணபதி, முருகானந்தம், கார்த்தியாயினி உள்ளிட்ட 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Also Read : முதல்வர் வேட்பாளர் யார்? இபிஎஸ் பெயரை தவிர்த்த அமித் ஷா.. விளக்கிய நயினார் நாகேந்திரன்!

மாநில செயலாளர்களாக கராத்தே தியாகராஜன், அமிர்பிரசாத் ரெட்டி, வினோஜ் பி செல்வம், அஸ்வத்தமன், மலர்கொடி, மீனாட்சி, ரகுராமன் உள்ளிட்ட 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொருளாளராக சேகர், இணை பொருளாளராக சிவசுப்பிரமணியன், மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயண திருப்பதி உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில இளைஞர் அணி தலைவராக சூர்யா, மகளிர் அணி தலைவராக கவிதா ஸ்ரீகாந்த் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.