பாஜக கூட்டணியில் தவெக இணையுமா? பி.எல். சந்தோஷ் சொன்ன விஷயம்.. நிர்வாகிகளுக்கு அட்வைஸ்!
BJP TVK Alliance : தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இல்லை என பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், என்ஆர் காங்கிரஸ் கட்சியும், தவெகவுடன் இணைய வாய்ப்புகள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 10 : பாஜக கூட்டணியில் (BJP Alliance) தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) இணையாது என பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல் சந்தோஷ் (BL Santosh) தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணையும் என தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்த நிலையில், அதற்கு பி.எல் சந்தோஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். தவெக கூட்டணிக்கு வரும் என எதிர்பார்ப்பில் தேர்தல் பணிகளை செய்ய வேண்டாம் எனவும் கட்சியினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களை உள்ளன. அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கூட்டணி பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகிறது. திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், அண்மையில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. மேலும் தங்கள் பக்கம் மற்ற கட்சிகளை இழுக்கவும் அதிமுக பாஜக முனைப்பு காட்டி விடுகிறது.
இதற்கிடையில், பாஜக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணையும் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், இதற்கு தவெக தரப்பிலும் திட்டவட்டமாக மறுக்கப்பட்டு வருகிறது. தவெக தலைவர் விஜய்யும் மறைமுகமாக பாஜக கூட்டணியில் இருக்க மாட்டோம் எனவும் கூறியிருக்கிறார். இருப்பினும், இரு கட்சிகளிடையே கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில், தவெக கூட்டணிக்கு வரவேண்டும் எனவும் பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்து வருகின்றனர். அதே நிலைபாட்டில் தான், அதிமுக தலைவர்களும் உள்ளனர்.




Also Read : தவெக மாநாட்டிற்கு கட்டுப்பாடுகள்.. இவர்களுக்கு அனுமதி இல்லை.. வெளியான அறிவிப்பு
பாஜக கூட்டணியில் தவெக இணையுமா?
இந்த நிலையில் தான், தேசிய பாஜக பொதுச் செயலாளர் பி எல் சந்தோஷ் முக்கிய விஷயத்தை பகிர்ந்துள்ளார். 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதியான நேற்று புதுச்சேரியில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பி.எல்.சத்தோஷ் தலைமை தாங்கினார். அப்போது பாஜக நிர்வாகிகளின் முக்கிய விஷயங்கள் குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.
Also Read : எம்.ஜி.ஆர் பயன்படுத்திய கார் எண்.. நயினார் நாகேந்திரனுக்கு ரெடியான பிரச்சார வாகனம்..
அப்போது பேசிய பி.எல் சந்தோஷ், ”தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக என் ஆர் காங்கிரஸ் அதிமுக கட்சிகளை உள்ளன. இந்த கட்சிகளே வரும் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும். தேசிய ஜனநாயகியை போட்டியில் தமிழக வெற்றிக் கழகம் இணைவதற்கு வாய்ப்புகள் இல்லை.
அதே நேரத்தில், கூட்டணியில் இருந்து என்ஆர் காங்கிரஸ் வெளியேறி தவெகவுடன் இணைய வாய்ப்புகள் இல்லை. அந்த தகவல்கள் எதுவும் உண்மை இல்லை. தவெக கூட்டணிக்கு வரும் என எதிர்பார்ப்பில் தேர்தல் பணிகளை செய்ய வேண்டாம்” என கூறியுள்ளார்.